கொங்குன்னா என்ன தெரியுமா? அது வேற டிபார்ட்மென்ட்... வானதியின் பதிவுக்கு அர்த்தம் சொன்ன விசிக..!

By Asianet TamilFirst Published Jul 10, 2021, 10:01 PM IST
Highlights

கொங்கு குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்ட பதிவுக்கு விசிக பதிலடி கொடுத்திருக்கிறது.  
 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் இடம்பெற்றார். மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட எல்.முருகனின் சுயவிபரப் பக்கத்தில், எல். முருகன், கொங்கு நாடு, தமிழ்நாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழகத்தின் ஒரு பகுதியை கொங்குநாடு என மத்திய அரசே குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தமிழகத்தை பிரித்து கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்தது.
 இந்நிலையில், கொங்கு நாடு பற்றி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஃபேஸ்புக் பதிவில், “கொங்கு தேர் வாழ்க்கை என்று இறையனாரின் சங்கப்பாடல் காலம் முதல் கொங்கு நாடு என்ற வரையறை உண்டு. அண்ட நாடு, அரையன் நாடு, ஆறைநாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, ஒருவங்க நாடு, காங்கேயம் நாடு, காஞ்சிக்கோயில் நாடு, காவடிக்கன் நாடு, கிழங்கு நாடு, குறும்பு நாடு, தட்டையன் நாடு, தலையன் நாடு, திருவாவினன் குடி நாடு, தென்கரை நாடு, நல்லுருக்கன் நாடு, பூந்துறை நாடு, பூவாணிய நாடு, பொன்களூர் நாடு, மணல் நாடு, வடகரை நாடு, வாரக்கண் நாடு, வாழவந்தி நாடு, வெங்கால நாடு என்று 24 நாடுகள் உள்ளடக்கிய கொங்கு நாடு என்று கொங்கு மண்டல சதகங்களில் குறிப்பு இருக்கிறது.


 ஆகெழு கொங்கர் என்று பதிற்றுப்பத்திலும், கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே என்று புற நானூற்றிலும் கொங்கு தேசம் பற்றிய விரிவான சித்திரம் தமிழ் சங்ககால இலக்கியம் முழுக்க பரந்து இருக்கிறது. நாயக்கர்களின் காலத்திலும் கொங்கு பாளையப்பட்டுக்கள் என்று கொங்கு பகுதிக்கான வரி நடைமுறைகள் பிற பகுதிகளை விட தனியாகத்தான் இருந்திருக்கிறது. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பொருளில் மூதுரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
வானதி சீனிவாசனின் இந்தப் பதிவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு பதிலடி கொடுத்திருக்கிறார். அவருடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி காமம் செப்பாது கண்டதுமொழிமோ என இறையனார் குறுந்தொகையில் சொல்வது,#கொங்கு என்றால் தேன். தன்னுடைய காதலியின் கூந்தல் மணத்தை விட வேறு ஏதாவது மலர் மணக்குதா? ஏனென்றால் பூ பூவாய் தேனெடுக்க அலைவது நீதானே தும்பியே என கேட்கிறார் வானதி” என்று வன்னியரசு தெரிவித்துள்ளார்.
 

click me!