தன்மானத்தை விட்டு அரசியல் செய்யவேண்டிய அவசியம் இல்லை - அண்ணாமலை அதிரடி

By Velmurugan s  |  First Published Sep 21, 2023, 2:53 PM IST

தன்மானத்தை விட்டுவிட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் தெரிவித்துள்ளார்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக, பாஜக கூட்டணியில் எந்தவித பிரச்சினையும் கிடையாது. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பிரச்சினை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும், அண்ணாமலைக்கும் பிரச்சினை உள்ளதா என்றால். இருக்கலாம், ஆனால் அது எனக்கு தெரியாது.

அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சித்தாந்தம் உள்ளது. அதிமுக தொடங்கப்பட்ட சூழல் வேறு, பாஜக தொடங்கப்பட்ட சூழல் வேறு எனவே அதிமுகவின் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதே போன்று எங்கள் கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எங்கள் கூட்டணியின் மைய புள்ளி நரேந்திர மோடி தான்.

Tap to resize

Latest Videos

undefined

தென் மாவட்ட மக்களுக்கு நற்செய்தி; சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை சோதனை ஓட்டம்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கள் கூட்டணியில் தொடர்கிறார்கள். அதிமுகவும், அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது. இப்படி தான் அரசியல் செய்யவேண்டும் என்ற திட்டத்தோடு நான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நான் யாரையும் தவறாக பேசவில்லை. ஆனால், என்னுடைய தன்மானத்தை சீண்டும் வகையில் செயல்பட்டால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. தன்மானத்தை விட்டு அரசியல் செய்யவேண்டும் என்ற நிலை எனக்கு கிடையாது.

நீட் எதிர்ப்பு மக்கள் போராட்டமாக மாறினால் வெற்றி கிடைக்கும் - அமைச்சர் உதயநிதி பேச்சு

அறிஞர் அண்ணா குறித்து கடந்த ஓராண்டு காரமாக நான் எத்தனை இடங்களில் பேசியுள்ளேன் என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக மதுக்கடைகளை திறக்கவேக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் அண்ணா. ஆனால், மதுக்கடைகளுக்கு அனுமதி அளித்தது கலைஞர் கருணாநிதி என்றார்.

click me!