இபிஎஸ்-ஐ விட எஸ்.பி. வேலுமணி நல்ல பீல்டு ஓர்க்கர்!பாஜகவுடன் கூட்டணி இல்லை சொன்னால் சிறைக்கு செல்வார்!புகழேந்தி

By vinoth kumar  |  First Published Sep 21, 2023, 11:35 AM IST

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதி படுத்தவேண்டும். இதில் ஏன் அமைதியாக இருக்கின்றார் என்றும் கேள்வி எழுப்பினார். அப்படி உறுதிபடுத்தினால் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார். 

Edappadi Palanisamy will go to jail if he says no alliance with BJP.. ops supporter pugazhendi  tvk

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக காவல்துறை ஏன் இதுவரை கைது செய்யவில்லை புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி;- இரண்டு முன்று தினங்களாக காமெடியாக , கைதட்டல், விசில் என போகின்றது. சிங்கக் கூட்டம், சிறு நரி கூட்டம் என பல டயலாக் பேசினார்கள். கூட்டணி முடிந்துவிட்டது என்றும் சொன்னார்கள். கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜெயக்குமாரும்  கூட்டணி முறிந்து விட்டது என சொல்லிவிட்டார். ஜெயக்குமார் கொடுத்த ஸ்டேட்மென்டிற்கு எதிராக கட்சிகாரர்களை அமைதியாக இருக்க சொல்லிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. 

Tap to resize

Latest Videos

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதி படுத்தவேண்டும். இதில் ஏன் அமைதியாக இருக்கின்றார் என்றும் கேள்வி எழுப்பினார். அப்படி உறுதிபடுத்தினால் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏன் எடப்பாடி பழனிச்சாமி மீது இதுவரை தமிழக அரசு  நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா என்ற ஆளுமையை விட எனது தாய், மனைவி உயர்ந்தவர்கள், அண்ணா ஓடி ஓளிந்தார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகின்றார். இரு சாதிகளை தூண்டிவிடும் வேலையை அவர் செய்கின்றார். எஸ்.பி. வேலுமணி நல்ல பீல்டு ஓர்க்கர். எடப்பாடி பழனிச்சாமியை விட வேலுமணி புத்திசாலி. எடப்பாடி பழனிச்சாமி மீது ஏராளமான வழக்குகள் இருக்கின்றது. ஆனால் அவற்றின் மீது மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகழேந்தி குற்றம்சாட்டினார். 

vuukle one pixel image
click me!