
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்பாட்டில் வைக்க நடைமுறையில் உள்ள பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் மருத்துவ நிபுணா்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதன்பிறகு, பேரவை கட்சிகளைச் சோந்த பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் ஆலோசிக்கவுள்ளாா் முதல்வா் ஸ்டாலின். இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி வரை தொடரும் என கோட்டை வட்டாரங்களில் கூறுகின்றனர். ஜூன் 3ஆம் தேதிக்குள் கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். எனவே இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உறுதி என்கிறார்கள்.
முழு ஊரடங்கு விதிக்கப்பட்டாலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த பாதிப்பு இதைவிட பல மடங்கு அதிகரித்திருக்கும் என்றே மருத்துவர்கள் கூறிவருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் ஜூன் 7 வரை கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.