பாஜக இடையூறு செய்யாதவரை ஆட்சிக்கு ஆபத்தில்லை; மருது அழகுராஜ்

 
Published : Sep 30, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
பாஜக இடையூறு செய்யாதவரை ஆட்சிக்கு ஆபத்தில்லை; மருது அழகுராஜ்

சுருக்கம்

There is no danger to the regime unless the BJP is disturbing

டிடிவி தினகரனுக்கு ஆதரவளிப்பவர்களின் நம்பிக்கை எது சார்ந்தது என்பது தெரியாது என்றும் இது இயற்கையாக உருவானதா? அல்லது தலைமை மீதான பற்றால் உருவானதா என்பது எனக்கு தெரியாது என்று மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

நமது எம்ஜிஆரின் முன்னாள் தலைமை செய்தியாளர் மருது அழகுராஜ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

தனியார் தொலைக்காட்சி நெறியாளர், டிடிவி தினகரனுக்கு இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை நம்பி இருக்கிறார்கள் என்றதற்கு, இந்த நம்பிக்கை
எது சார்ந்தது என்பது எனக்கு தெரியாது; இது இயற்கையாக உருவானதா? தலைமை மீதான பற்றால் உருவானதா என்பது எனக்கு தெரியாது என்று
கூறினார்.

டிடிவி தினகரன், முன்னதாக இந்த ஆட்சி அமைய ஆதரவு அளித்தார், இதுவே பின்னர் இந்த ஆட்சி கலைக்க வேண்டும் என்று கூறுகிறார். டிடிவி
தினகரனின் இந்த நோக்கம் தப்பில்லையா? என்றும் மருது அழகுராஜ் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா அமைத்து கொடுத்த வாய்ப்பையே அவர்களால் தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை. 

இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் நிறைவு செய்யுமா என்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த மருது அழகுராஜ், பாரதிய ஜனதா கட்சி இடையூறு செய்யாதவரை ஆபத்தில்லை.

ஜெயலலிதா சொல்லிய வாசகத்தை நிலைநிறுத்தி பார்த்தால் இந்த அரசுக்கு ஆபத்தில்லை என்று மருது அழகுராஜ் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..