
டிடிவி தினகரன், எழுத்தாளனை காயப்படுத்துகிறார் என்றும் இந்தியன் பீனல்கோடு-ஐ ஏமாற்றும் திறமை டிடிவிக்கு உண்டு என்றும் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையின் முன்னாள் தலைமை செய்தியாளர் அழகு மருதுராஜ் கூறியுள்ளார்.
நமது எம்ஜிஆரின் முன்னாள் தலைமை செய்தியாளர் மருது அழகுராஜ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து சில கேள்விகளை எழுப்பினார்.
அப்போது பேசிய மருது அழகுராஜ், டிடிவி தினகரன் மீதுபோடப்பட்ட வழக்குகள் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.
டிடிவி தினகரனுக்கு எதிராகவே ஆர்.கே. நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது உண்மை என்று கூறினார்.
நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மருது அழகுராஜ், நான் ராஜினாமா கடிதம் கொடுத்து வெளியே வந்தேன் என்றார்.
சசிகலாவின் பொதுக்குழு உரை, 41 அறிக்கைகள் உள்ளிட்டவைகள் நான் எழுதி கொடுத்தேன். இது ஊதியத்துக்காக அல்ல என்றும் கூறினார். பாரதிய ஜனதா கட்சியுடன் தனிப்பட்ட ரீதியான வண்ணம் இல்லை.
டிடிவி தினகரன் எழுத்தாளனை காயப்படுத்துகிறார். இந்தியன் பீனல்கோடு-ஐ ஏமாற்றும் திறமை டிடிவி தினகரனுக்கு உண்டு என்றும் மருது அழகுராஜ் கூறினார்.
அம்மாவின் பக்தன், அம்மாவின் ஊழியன், அம்மாவின் விசுவாசி என்றாலே தினகரனுக்கு பிடிக்காது. வழக்கறிஞர் ஜோதியை விரட்டியது இவர்தான் என்றும் மருது அழகுராஜ் குற்றம் சாட்டினார். டிடிவி தினகரன், பாஜகவுக்கு பயப்படுகிறார் என்றும் மருது அழகுராஜ் கூறினார்.