யாரு என்ன சொன்ன என்ன? அதிமுக - பாஜக கூட்டணி எந்த மாற்றமும் இல்லை.. நயினார் நாகேந்திரன் அதிரடி சரவெடி.!

By vinoth kumarFirst Published Mar 23, 2023, 7:38 AM IST
Highlights

சமீபத்தில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெறுவதற்குரிய உத்திகள் என்னிடம் உள்ளது. ஒருவேளை தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதிமுக - பாஜக இடையில் நீடித்து வரும் மோதல் போக்கு நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதும் சரியாகிவிடும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அதிமுக பாஜகவுக்கு இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெறுவதற்குரிய உத்திகள் என்னிடம் உள்ளது. ஒருவேளை தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க;- எடப்பாடி பதறட்டும்..! கோபாலபுரம் கதறட்டும்.! அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

இதற்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் கூட்டணி குறித்து முடிவு செய்வது தேசிய தலைமை தான் என்று கருத்து தெரிவித்தனர். அப்போதே அண்ணாமலை சொல்வது அவரது தனிப்பட்டக் கருத்து என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்குமா என்ற சந்தேகம் அனைவரின் மத்தியில் எழுந்த நிலையில் இதற்கு நயினார் நகேந்திரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ நயினார் நகேந்திரன்;- தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று. அகில இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சி. இன்னும் சொல்லப்போனால், உலக அளவில் அதிக எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்களைக்கொண்ட கட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது.  தற்போது வரை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறோம். 

இதையும் படிங்க;- அண்ணாமலை சொன்னது.? கூட்டணி தான் முக்கியம் கூறும் நயினார் நாகேந்திரன்? அதிமுக Vs பாஜக

அதிமுக - பாஜக கூட்டணி தற்போது வரையிலும் தொடர்கிறது. கீழ்மட்டத்தில் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறார்கள். அது இருக்கத்தான் செய்யும். இப்போது இருக்கும் பிரச்சனைகளையெல்லாம் தேர்தல் அறிவிப்பு வந்ததும் மறந்துவிட்டு வேட்பாளரின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபட்டு வேலை பார்ப்பார்கள் என நயினார் நகேந்திரன் கூறினார். 

click me!