ஆடை தயாரிப்பில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது... முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

By Narendran SFirst Published Mar 22, 2023, 8:50 PM IST
Highlights

பி.எம்.மித்ரா பூங்கா அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமருக்கு நிச்சயம் அழைப்பு விடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பி.எம்.மித்ரா பூங்கா அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமருக்கு நிச்சயம் அழைப்பு விடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக விருதுநகரில் அமையவுள்ள PM MITRA பூங்காவை சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுநகரில் ஜவுளி மண்டலம், ஆடைப் பூங்கா அமைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு அடுத்தப்படியாக அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில் நெசவு தொழில். ஆடை தயாரிப்பில் முதன்மையான மாநிலமாக தமிழநாடு விளங்குகிறது.

இதையும் படிங்க: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

பெருமளவில் பருத்தி நூல் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டம் குமரலிங்கபுரத்தில் பி.எம்.மித்ரா பூங்கா அறிவித்த பிரமருக்கு நன்றி. அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமரை நிச்சயம் அழைப்போம். தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருக்க வேண்டும் என செயலாற்றிவருகிறோம். ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா சிப்காட் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதையும் படிங்க: தள்ளாடும் தமிழகம் - ஆழ்ந்த உறக்கத்தில் ஆட்சியாளர்கள்: அண்ணாமலையின் பட்ஜெட் அலசல்

விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவில் பூஜ்ய கழிவு வெளியேற்றம் என்ற வகையில் சுத்திகரிப்பு வசதி செய்யப்படும். சிப்காட் மூலம் இதுவரை 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொழில் துறையில் உலகளவில் தமிழகம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தெற்கு ஆசியாவில் தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக உருவாக்கிட அனைவரும் பாடுபட வேண்டும். ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவால் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவின் நூல் களஞ்சியம் என்று தமிழகம் அழைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

click me!