காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Mar 22, 2023, 8:26 PM IST
Highlights

காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் இன்று (22.3.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் பூபதி (வயது 57), முருகன் (வயது 40), சசிகலா (வயது 35), தேவி (வயது 32), சுதர்சன் (வயது 31), வித்யா (வயது 30) மற்றும் அடையாளம் காணமுடியாத மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு... தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

மேலும் இவ்விபத்தில் கடும் காயமடைந்து உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும் கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தள்ளாடும் தமிழகம் - ஆழ்ந்த உறக்கத்தில் ஆட்சியாளர்கள்: அண்ணாமலையின் பட்ஜெட் அலசல்

முன்னதாக காஞ்சிபுரம் குருவிமலை கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் நாட்டுவெடித் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த போது மருந்துகள் உரசி தீப்பிடித்ததில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 3 பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

click me!