தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் திமுக 7 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஒரு சுயேச்சை வேட்பாளரும் திமுகவுக்கு ஆதரவளித்தார். அதேபோல், அதிமுக 10 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அதிமுக நகராட்சி தலைவர் ராமலட்சுமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் திமுக 7 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஒரு சுயேச்சை வேட்பாளரும் திமுகவுக்கு ஆதரவளித்தார். அதேபோல், அதிமுக 10 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இதையும் படிங்க;- சிங்கப்பூரில் இருந்து அப்பல்லோவுக்கு ஷிப்ட் செய்யப்பட்ட கனிமொழியின் கணவர்.. ஓடோடி சென்று பார்த்த முதல்வர்.!
இந்நிலையில், நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் போட்டியிட்ட ராமலட்சுமி வெற்றி பெற்றார். அதிமுக ஆதரவில் வெற்றி பெற்றதால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. நகராட்சி திட்டங்களைச் செயல்படுத்துவதில் இடையூறு ஏற்படுத்தி வந்ததால் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
இதையும் படிங்க;- பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்.. வழக்கு இபிஸ்க்கு எதிராக மாறுகிறதா? ஐகோர்ட்டில் பரபரப்பு வாதம்..!
இதனால், அதிருப்தியில் இருந்து வந்த செங்கோட்டை அதிமுக நகராட்சி தலைவர் ராமலட்சுமி நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவ.பத்மநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.