இப்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை...! கைவிரித்த தேர்தல் ஆணையம்

By manimegalai aFirst Published Oct 6, 2018, 4:02 PM IST
Highlights

தமிழகத்தில் பருவமழை காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டதை அடுத்து, 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் பருவமழை காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டதை அடுத்து, 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தலைமையில் 2 நாள் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று துவங்கி இன்றும் நடைபெற்று  வந்தது. இந்த கூட்டத்தில், 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன், தேர்தல் ஆணையர் ராவத் ஆலோசனை நடத்தினார். இதில் ராஜஸ்தான், ம.பி., சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து தெலுங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தேர்தல் ஆணையர்கள் சுனில் அரோரா, அசோக் லவாசா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ஆகிய மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில்சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றார். டிசம்பர் 15 ஆம் தேதிக்கு முன்னர் 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். 4 மாநில தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்றார்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் பயன்படுத்தப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படிவேட்புமனுசில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சத்தீஷ்கர் 90 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் 200 தொகுதிகளுக்கும், மிசோராமில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்றார்.  4 மாநிலங்களிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மிசோராம் தவிர மற்ற மாநிலங்களில் தேர்தல் செலவு ரூ.28 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்தநிலையில், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி இன்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்விரு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவால் திருவாரூர் தொகுதியும், அதிமுக எம்.எல்.ஏ. போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருந்தன. 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி தலைமை தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்படும் நிலையில், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கனமழை உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழக தலைமை செயலாளர் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

click me!