பரோலில் வரும் சசிகலா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

By manimegalai aFirst Published Oct 6, 2018, 3:15 PM IST
Highlights

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இன்று மாலை பரோலில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் ஒருவரையொருவர் குற்றச்சாட்டி வரும் நிலையில் சசிகலா, பரோலில் வெளிவர உள்ளதாக வந்த தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இன்று மாலை பரோலில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் ஒருவரையொருவர் குற்றச்சாட்டி வரும் நிலையில் சசிகலா, பரோலில் வெளிவர உள்ளதாக வந்த தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தார். திகார் சிறையில் வந்த தான் வந்த விறகு, ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும், அவரது இந்த சந்திப்பு நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததை, அரசியல் காரணங்களுக்காக இதுவரை நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன். எனக்கு முக்கியமான பதவியை கொடுக்க தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தூது விட்டார் என்று ஓ.பன்னீர்செல்வம் குறித்து பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

டிடிவி தினகரனின் இந்த பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் நிலையில், தொண்டர்களை குழப்புவதற்காக டிடிவி தினகரன் இப்படி பேசுவதாக அதிமுக தரப்பினர் பலர் குற்றம் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், தினகரனின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், தினகரனை தான் சந்தித்தது உண்மைதான் என்று தெரிவித்திருந்தார். எந்த காலத்திலும் தினகரானால் ஆட்சியை கைப்பற்ற முடியாது. குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணமும் தனக்கு இல்லை.

கட்சியை பொறுத்தவை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும், இணைத்தே முடுவு எடுப்பதாகவும், ஆனால் தரக்குறைவான அரசியல் தினகரன் செய்வார் என எதிர்பார்க்கவில்லை. பொய்க்கு மேல் பொய் சொல்லி வருகிறார் தினகரன் என கூறினார். அரசியல் நாகரீகம் தெரியாத அநாகரீகமானவர் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்திருந்தார்.

டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விவகாரம் தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் இருக்கும் சசிகலாவை, சந்தித்துள்ளார் தினகரன். அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ள இந்த நிலையில், சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் இன்று வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா, 5 நாட்கள் பரோலில், இன்று மாலை 5 மணிக்கு வெளிவர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

click me!