பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை! இலவு காத்த கிளியாக காத்திருக்கும் வானதி! திருமா அதிரடி சரவெடி..!

By vinoth kumar  |  First Published May 15, 2023, 10:42 AM IST

திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எந்த ஒரு பட்டியலின மக்களின் பிரச்சினைக்கும் இந்த அரசாங்கத்தால் தீர்வு காண முடியவில்லை.


திமுக கூட்டணியில் ஏதேனும் பிளவுகளை ஏற்படுத்தி விட முடியாத என இலவு காத்த கிளி போல காத்திருப்பதில் வானதி சீனிவாசனும் ஒருவர் என திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்;- திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எந்த ஒரு பட்டியலின மக்களின் பிரச்சினைக்கும் இந்த அரசாங்கத்தால் தீர்வு காண முடியவில்லை. பின் எதற்காக திருமாவளவன் அங்கு இருக்கிறார்? எனவே, திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- கர்நாடகாவில் இருந்து பாஜக துடைத்தெறியப்பட்டுள்ளதாக முதல்வர் கனவு காண்கிறார் - வானதி சீனிவாசன் கருத்து

இந்நிலையில், வானதி சீனிவாசனுக்கு பதிலளித்துள்ள திருமாவளவன்;- மதவாத மற்றும்சாதியவாத சக்திகளான பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது. திமுக கூட்டணியில் ஏதேனும் பிளவுகளை ஏற்படுத்தி விட முடியாதா என பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் இலவு காத்த கிளி யாக காத்திருக்கின்றனர். அதில் வானதி சீனிவாசனும் ஒருவர். திமுகவையும் விசிகவையும் பிரிக்க நினைப்பது நடக்காது என திருமாவளவன் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  கர்நாடக தேர்தலில் விரட்டி அடிக்கப்பட்ட பாஜக! அதிமுக இப்பயாச்சும் புரிஞ்சுக்கங்க! திருமாவளவன்..!

விசிக கட்சியை பொருத்தமட்டில் முழு மதுவிலக்கு என்பதே கொள்கை. திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மதுவிலக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என கூறியதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறேன் என திருமாவளவன் கூறினார். 

click me!