கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சிப்பதற்கு நடிகை நமீதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆட்சியை இழந்த பாஜக
தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடாக. இந்த மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரம் முயற்சி மேற்கொண்டது. இதற்காக பிரதமர் மோடி, மத்திய அமித்ஷா உள்ளிட்டவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டர். தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலையும் தேர்தல் பணிக்காக ஹெலிகாப்படரில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தநிலையில் இந்தியாவே ஆவலோடு எதிர்பார்த்த தேர்தல் முடிவு நேற்று முன் தினம் வெளியானது. அதில் 224 தொகுதி உள்ள கர்நாடகவில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாஜக 66 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
undefined
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி
இந்த தேர்தல் தோல்வி பாஜக மேலிட தலைவர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மேலும் அண்ணாமலை தேர்தல் பொறுப்பாளாராக நியமித்ததே தோல்விக்கு காரணம் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவையில் பாஜக சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதாவும் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மட்டும் தான் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைக்க இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மைசூர் சிங்கம் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பாஜக கட்சி நன்கு முன்னேறி வருகிறது. மேலும் அதன் காரணமாக தான் எங்கு சென்றாலும் பாஜக பெயர் ஒலிக்கிறது என கூறினார்.
அண்ணாமலையை விமர்சிப்பதா.?
கர்நாடகா தேர்தல் தோல்விக்கு காரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் தோல்விக்காக எங்கள் தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க கூடாது. என் தலைவரைப் பற்றி இவ்வாறு பேசக்கூடாது என கூறினார். அடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலையின் கவனம் தமிழகத்தின் மீது இருக்கலாம், அவர் தனது பணியை சிறப்பாக செய்வார் என தெரிவித்தார். கர்நாடகா தோல்வி பெரிய பிரச்சனை இல்லை, அடுத்த முறை வெற்றி பெறலாம். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. எனவே இன்று வெற்றிபெறவில்லை என்றால் நாளை வெற்றி பெற்று விடலாம் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்