கர்நாடகாவில் பாஜகவின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜகவின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பாஜக-வின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: திராவிட மண்ணில் பாஜக வர முடியாது.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வாழும் பெங்களூரு பகுதிகளில் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் விசிக சார்பில் பிரசாரத்தை மேற்கொண்டோம். பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
இதையும் படிங்க: அண்ணாமலை எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது..பாஜகவை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்
கர்நாடகாவில் பாஜக தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜக-வை தூக்கிச் சுமந்து வரும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பாஜகவுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.