எம்.ஜி.ஆர் இருந்தபோது திமுக வெற்றி பெறுவதே கடினமாக இருந்தது என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தேர்தல் நடைபெற்ற 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், பாஜக 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
கர்நாடக மாநில தேர்தல் முடிவு வெளியான போது திராவிட மண்ணிலிருந்து பாஜக விரட்டி அடிக்கப்பட்டது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார். இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்றும் தமிழகத்தில் எத்தனையோ முறை திமுக தோல்வியை சந்தித்துள்ளது.
undefined
இதையும் படிங்க..கர்நாடக தேர்தலில் மண்ணை கவ்விய 14 அமைச்சர்கள்.. இப்படியொரு நிலைமையா.! பரிதாபத்தில் பாஜக
தேர்தல் தோல்வியை வைத்துக்கொண்டு எதையும் கூறிவிட முடியாது. திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என முதல்வர் ஸ்டாலின் அவருடைய திருப்திக்காக கூறி வருகிறார். தமிழ் மண்ணான புதுச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் இருந்தபோது திமுக வெற்றி பெறுவதே கடினமாக இருந்தது.
தமிழகம், புதுச்சேரியில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். கர்நாடக மாநிலத்தில் 2018ல் பாஜ. , வின் ஓட்டு சதவீதம் எப்படி இருந்தததோ, அதே போன்ற ஓட்டு சதவீதம் இப்போதும் உள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க..பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பிரபல நடிகைகள்.. ஒரு நைட்டுக்கு 25 ஆயிரம் - வெளியான அதிர்ச்சி தகவல்