எம்.பி. தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக தோல்வியை கருத இயலாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
எம்.பி. தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக தோல்வியை கருத இயலாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத முடியாது. மஜத கட்சியின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு சென்றதால் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அம்மா இருந்திருக்கணும்.. திமுக ஆட்சியையும், கள்ளச்சாராயத்தையும் பிரிக்க முடியாது - வெளுத்து வாங்கிய சசிகலா
undefined
பாஜகவின் வாக்கு வங்கிகள் சரியவில்லை. எம்.பி. தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக தோல்வியை கருத இயலாது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டுவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததோடு, ஆட்சி அமைத்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதற்கு நிதியும் ஒதுக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் விசிக.. திருமாவுக்கு தூண்டில் போட்ட பாஜக - திடீர் ட்விஸ்ட்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ்க்கு கூறிய வாழ்த்து செய்தியில் மேகதாது தொடர்பாக குறிப்பிடவில்லை. மேகதாது வேண்டாம் என குறிப்பிடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் இதற்கு எதிராக முதலமைச்சர் ஒருவார்த்தை கூட சொல்லவில்லை. காங்கிரஸ் மேகதாது மீது அணை கட்ட முயற்சித்தால் பாஜகவே முதலில் போராட்டத்தை நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.