கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்குப் பின்னால் டி.கே.சிவகுமார், சித்தராமையா போன்ற பல்வேறு அரசியல் தலைவர்களின் வியூகங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியமான நபராக அம்மாநில தேர்தல் பொறுப்பாளர் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் சசிகாந்த் செந்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை இருந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 10 முதல் 20 இடங்கள் கிடைத்துள்ளது என கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கட்டுப்பாட்டறை பொறுப்பாளராக பணியாற்றிய சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்படி கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 136 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 65 தொகுதிகளிலும், மஜத 19 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றன.
இதையும் படிங்க;- அண்ணாமலை எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது..பாஜகவை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்
இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னால் டி.கே.சிவகுமார், சித்தராமையா போன்ற பல்வேறு அரசியல் தலைவர்களின் வியூகங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியமான நபராக அம்மாநில தேர்தல் பொறுப்பாளர் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் சசிகாந்த் செந்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சசிகாந்த் செந்தில் தன் பணிக்காலத்தில் அவர் கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். ஆகையால், அவருக்கு கர்நாடக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள் என்னவென்பது தெளிவான புரிதல் இருந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக சமூக வலைதள பிரச்சாரம், ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது, விளம்பரம் கொடுப்பது, நவீன வகையிலான பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்ற பணிகளை மிக சிறப்பாக செய்ததனால் தான் கர்நாடகாவில் காங்கிரஸ் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இதையும் படிங்க;- எம்.பி. தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக தோல்வியை கருத இயலாது... அண்ணாமலை கருத்து!!
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கட்டுப்பாட்டறை பொறுப்பாளராக பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ் சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கர்நாடகாவில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை இருந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 10 முதல் 20 இடங்கள் கிடைத்துள்ளது. ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற மூத்த தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாக பேசி மாநில பாஜகவை ஒழிக்கும் வேலையில் அவர் செயல்பட்டார். அண்ணாமலையை கர்நாடகாவுக்கு அழைத்து வரும் ஐடியாவை கொடுத்தவருக்கு நன்றி என சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார்.