நாட்டை அழிக்க நினைக்கும் அங்கியை விட , லுங்கியை விட , சங்கியாக இருப்பது மேல்... பாஜக ராம ஸ்ரீனிவாசன்.

By Ezhilarasan BabuFirst Published Oct 10, 2022, 6:54 PM IST
Highlights

நாட்டையே மதமாற்ற நினைக்கும் அங்கியை விட, நாட்டையே அழிக்க நினைக்கும் லுங்கியை விட,  சங்கியாக இருப்பது எவ்வளவோ மேல் என பாஜக   மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமசீனிவாசன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசினார்.
 

நாட்டையே மதமாற்ற  நினைக்கும் அங்கியை விட, நாட்டையே அழிக்க நினைக்கும் லுங்கியை விட,  சங்கியாக இருப்பது எவ்வளவோ மேல் என பாஜக   மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமசீனிவாசன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசினார்.

ஸ்ரீதொலைகாட்டியின் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பாஜக பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:-  வரலாறு சில நேரங்களில் தூங்கி வழியும், சில நேரங்களில் எழுந்து நடக்கும், ஆனால் இப்போது அது தாவிக்குதித்து ஓடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இப்போதெல்லாம் நாம் யாரும் ஒரு வினாடி கூட தூங்கி விட முடியாது. எதிலும் அலட்சியமாக இருந்துவிட முடியாது, என்ற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். நம்மை விட நமது எதிரிகள் வேகமானவர்கள். நம்மைவிட நம் எதிரிகள் பலமானவர்கள், நம்மை விட நம் எதிரிகளுக்கு எல்லா திறன்களும் இருக்கிறது. ஆனால் எதிரிகளை விட நாம் பக்கம் தர்மம் இருக்கிறது.

உண்மை நம் பக்கம் இருக்கிறது, அதுதான் நம்பலம். இப்போது யாரும் சும்மா இருந்துவிட முடியாது, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளம் தேவைப்படுகிறது. இப்போது நான் பாஜக பொதுச் செயலாளராக இருக்கிறேன், நாளைக்கு நான் இல்லாவிட்டாலும்கூட இந்த வேலையை செய்வதற்கு பலர் காத்திருக்கின்றனர். ஆனால் சில வேலைகளை சிலர் மட்டும்தான் செய்ய முடியும், அதைதான் இப்போது ஸ்ரீ டிவி செய்து கொண்டிருக்கிறது. கொலம்பஸ் இந்தியாவுக்கு வந்ததன் நோக்கம் என்பது  மதமாற்றம் செய்யவே, அதற்காகத்தான் அவன் இந்தியாவை நோக்கி வந்தான். அதேபோல மெக்காலே கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டதும் மதமாற்றம் செய்யத்தான்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் பசுவதை தடுப்புச் சட்டம்..?? பின்னணியில் பாஜக.. அலறி துடிக்கும் செ.கு தமிழரசன்.

மெக்காலே தனது டைரி குறிப்பில் இந்த கல்வி திட்டத்தை அடுத்த 70 ஆண்டுகளுக்கு இங்கு பின்பற்றினால்,  அக்கல்வி திட்டத்தை படிக்கிறவர்கள்  நிறத்தளவில் மட்டும்தான் இந்தியர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்களுடைய பழக்க வழக்கங்கள், மனதளவில் அவர்கள் ஆங்கிலேயர்களாக மாறிவிடுவார்கள் என எழுதி வைத்திருக்கிறான், இதெல்லாம் இந்து அடையாளங்களை அழிப்பதற்காகத்தான், எதெல்லாம் இந்து அடையாளங்காக இருக்கிறதோ அதையெல்லாம் மறுப்பதுதான் செக்யூலரிஸம். எங்காவது ஒரு இருந்து தன்மை இருக்கிறது என்றால் அதை உடனே சர்ச்சைக்குரிய என மாற்றி விடுகின்றனர். வந்தே மாதரத்தை சர்ச்சைக்குரியது என்கின்றனர்.  பாரத் மாதா கி ஜேவை சர்ச்சைக்குறியது என்கின்றனர்.

இதெல்லாம் சர்ச்சைக்குரியவையா, எல்லாவற்றையும் சர்ச்சைக்குரியவைகாள மாற்றி  இந்து மதத்தின் அடையாளங்களை அழிப்பது தான் அவர்களின் நோக்கம். இந்து அறநிலைத்துறை சைவர் அறநிலையத்துறை,  வைணவ அறநிலைத்துறை என மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகிறார். ஆனால் அவருடைய சாதி சான்றிதழில் இந்து ஆதிதிராவிடர் என்று தான் இருக்கிறது, அதனால்தான் அவர் தனி தொகுதியில் போட்டியிட முடிகிறது.  அவருடைய சான்றிதழில் முதலில் மாற்றம் செய்வாரா? தொடர்ந்து பல்வேறு வகையில் இந்த அடையாளங்கள் மறுக்கப்படுகிறது. இன்னும் கொஞ்ச நாட்கள் ஆனால் விவேகானந்தர் கூட இன்று இல்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்.

இதையும் படியுங்கள்:   ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக

ராமகிருஷ்ண பரமஹம்சர்கூட இந்து இல்லை என்று சொல்லுகிற காலம் வரும், முதன் முதலில் சுப்பிரமணிய பாரதி பாடிய பிறகுதான் தமிழ்நாடு என்ற வார்த்தையே அறிமுகமானது, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று அவர்தான் பாடினார், அதேபோல நம்ம ஊரில் குடுகுடுப்பைக்காரர்கள் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் கங்கை இருக்கிறது என்று சொல்வார்கள், அதாவது நீர் நிலை இருக்கிறது என்று அர்த்தம்,  நீரெல்லாம் கங்கை நிலமெல்லாம் காசி இதுதான் இந்தியா.   இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

click me!