ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லும் முதல்வர் , தீபாவளிக்கும் மற்ற இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லாமல் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் பாஜக மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி.
திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின், ‘நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்யும் பாஜக. எந்த கீழ்தரமான அரசியலுக்கும் போவாங்க. மதத்தை, ஆன்மிக உணர்வை தூண்டி அரசியல் செய்ய பார்க்கிறது பாஜக.
அரசியலையும், ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள் என்பதால்தான் தமிழ்நாட்டில் மூச்சு திணறுகிறது பாஜக’ என்று பாஜகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பாஜகவினர் வரிசையாக திமுக மீது குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யும் பாஜக.
இதையும் படிங்க..“அதிமுக பிளவு எப்படியும் பாஜகவுக்கு ப்ளஸ் தான்..” அதிமுக கதி அவ்ளோதான் ? பகீர் கிளப்பிய குருமூர்த்தி !
எந்த கீழ்த்தரமான அரசியலுக்கும் போவார்கள் பாஜகவினர். தங்களது சாதனைகளை சொல்வதற்கு ஏதுமில்லாத காரணத்தினாலே நம்மை பற்றி அவதூறு செய்து அரசியல் நடத்துகிறது பாஜக. மதத்தை,ஆன்மீக உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் நடத்த பார்க்கிறது. அரசியலையும் ஆன்மீகத்தையும் எப்போதும் இணைக்காத மக்கள் தமிழ் மக்கள் என்பதால் மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது பாஜக என்று மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.
எந்த மொழியில் திமுக பேசுகிறதோ அதே மொழியில் பாஜக பேசவேண்டியது கட்டாயம். பாஜக வின் மக்கள் நல மற்றும் கட்டமைப்பு திட்டங்களினால் தான் தமிழக அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. தனக்கென எந்த வருவாய் ஈட்டும் திட்டங்களையும் இந்த ஒன்றரை வருடத்தில் திமுக அரசு முன்னெடுக்கவில்லை. ரம்ஜானுக்கும், கிறுஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லும் முதல்வர் , தீபாவளிக்கும் மற்ற ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லாமல் இருப்பதோடு, ஹிந்து நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க..திருமணம் ஆனவருடன் பாலியல் உறவு கொண்ட பெண்.. நீதி கேட்ட பெண்ணுக்கு கோர்ட் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு !
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யும் பாஜக.எந்த கீழ்த்தரமான அரசியலுக்கும் போவார்கள் பாஜகவினர்.தங்களது சாதனைகளை சொல்வதற்கு ஏதுமில்லாத காரணத்தினாலே நம்மை பற்றி அவதூறு செய்து அரசியல் நடத்துகிறது பாஜக. மதத்தை,ஆன்மீக உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் நடத்த பார்க்கிறது.(1/ 4)
— Narayanan Thirupathy (@Narayanan3)தனக்கென எந்த வருவாய் ஈட்டும் திட்டங்களையும் இந்த ஒன்றரை வருடத்தில் திமுக அரசு முன்னெடுக்கவில்லை. ரம்ஜானுக்கும், கிறுஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லும் முதல்வர் , தீபாவளிக்கும் மற்ற ஹிந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லாமல் இருப்பதோடு, ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக, ஹிந்து வழிபாட்டு முறைகளுக்கு எதிராக பேசியதால் ஹிந்துக்கள் கொதித்தெழுந்து விமர்சிப்பதால், தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுக தான் என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு