
சசிகலா லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அதிகாரிகளிடையே இருவேறு கருத்து நிலவுவதாகவும், உயர்மட்ட குழு விசாரணைக்கு பிறகு கருத்து தெரிவிப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக ரூபா கடந்த 23 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு விசிட் அடித்து, பல புதிய நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த மாதம் 10 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற ரூபா அங்கு ஆய்வு நடத்தினார். அப்போது சசிகலாவுக்கு ஜெயிலில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதும், அவருக்கு சமையல் செய்து கொடுக்க சில கைதிகள் நியமிக்கப்பட்டிருப்பதையும் ரூபா கண்டுபிடித்தார்.
அப்போது சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுக்க, கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ரூபாவுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரூபா கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
இதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், சசிகலா லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அதிகாரிகளிடையே இருவேறு கருத்து நிலவுவதாகவும், உயர்மட்ட குழு விசாரணைக்கு பிறகு கருத்து தெரிவிப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.