"அதிகாரிகளுக்கு இடையேயான மோதலில் சசிகலா பெயரை பயன்படுத்துகிறார்கள்" : புகழேந்தி காட்டம்!

Asianet News Tamil  
Published : Jul 13, 2017, 04:31 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
"அதிகாரிகளுக்கு இடையேயான மோதலில் சசிகலா பெயரை பயன்படுத்துகிறார்கள்" : புகழேந்தி காட்டம்!

சுருக்கம்

pugazhendhi condemns dig rupa

பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக டிஜிபி சத்தியநாராயணாவுக்கு எதிராக, டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார். இது சம்பந்தமாக கர்நாடக அரசு தனிக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சிறையில் இருக்கும் சசிகலா பணம் கொடுத்து எந்தவித சலுகையும் பெறவில்லை என்றும் சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் கூறி உள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக மாநில அதிமுக அமைப்பாளரும் செய்தி தொடர்பாளருமான புகழேந்தி, சசிகலா எப்போதும் சிறையில் தனக்கு சிறப்பு வசதியோ, உணவோ வேண்டும் என்று கேட்டதில்லை என்றும், இது அதிகாரிகளுக்கு இடையேயான மோதல் என்றும் கூறியுள்ளார்.

அதிகாரிகளுக்கு இடையேயான மோதலில் சசிகலா பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சசிகலா முன்பு வழக்கு விசாரணைக்கு பெங்களூரு வந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டலில் சாதாரண உணவுகளைத்தான் சாப்பிட்டார். 

தற்போது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இதுபோன்ற புகார் எழுப்பப்பட்டுள்ளதாக புகழேந்தி கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ரணகளத்திலும் குதூகலம்..! எடப்பாடிக்கு சேலஞ்சு விடும் ஸ்டாலின்..!
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்..! 97.6 சதவிகிதம் OBC, SC, ST பிரிவு நீதிபதிகள்..! மத்திய சட்ட அமைச்சர் தகவல்