எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 35,000 வாக்காளர்கள் இருக்காங்க! வெற்றி திமுகவுக்கு தான்! பாஜக முன்னாள் நிர்வாகி.!

By vinoth kumarFirst Published Feb 7, 2023, 11:05 AM IST
Highlights

தமிழக பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்கள் முதல்வர் ஆசிபெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற வைப்பார்கள் என என்.விநாயகமூர்த்தி கூறியுள்ளார். 

தமிழக பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து, திமுகவில் இணைந்த விநாயகமூர்த்தி ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் முழுவீச்சுடன், தீவிரக் களப்பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற வைத்து, திமுக தலைவர் கரத்தில் ஒப்படைப்பேன் என்று கூறியுள்ளார். 

இதுதொடர்பாக என்.விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நான் பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளராக பணியாற்றி வந்தேன். தற்போது, தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்றுகிற தலைவராக, முதல்வர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அவர் தலைமையின்கீழ் பணியாற்றவும், கலைஞர் முதல்வராக இருந்து எங்கள் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு 2009-ம் ஆண்டு வழங்கியதால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள். அத்துடன், அரசுப் பணியிலும் பணியாற்றி வருகிறார்கள்.

நான், மதுரை வீரன் மக்கள் கட்சியை நடத்தி வருகிறேன். அதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினராக உள்ளனர். அவர்களையும் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைத்து பணியாற்றுவதற்கும், இணைப்பு விழா நடத்துவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர். 

இவர்கள் அத்தனை பேரையும், நடைபெற உள்ள இடைத் தேர்தலில், முதல்வர் ஆசிபெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்களிப்பார்கள். இத்தொகுதி முழுவதும் முழுவீச்சுடன், தீவிரக் களப்பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற வைத்து, திமுக தலைவர் கரத்தில் ஒப்படைப்பேன் என்று இந்நேரத்தில் உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!