இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பா.? ஒன்றாக பிரச்சாரம் செய்வார்களா..? பரபரப்பு தகவல் கூறிய கு.ப.கிருஷ்ணன்

By Ajmal KhanFirst Published Feb 7, 2023, 9:55 AM IST
Highlights

ஈரோடு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை ஓபன்னீர் செல்வம் சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு எதுவும் நடக்கலாம் என முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு தேர்தல்- அதிமுக வேட்பாளர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர் செல்வம் செந்தில் முருகன் என்ற வேட்பாளரை அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி அணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசை அறிவித்தது. இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரு தரப்பு சார்பாக பொது வேட்பாளரை நிறுத்த அறிவுறுத்தியது. மேலும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தென்னரசுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்படுமா? அவைத்தலைவர் என்ன சொன்னாரு தெரியுமா?

இரட்டை இலை வெற்றிக்கு பாடுபடுவோம்

இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் போட்டியில் இருந்து வாபஸ் வாங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் தென்னரசு போட்டியிடவுள்ளார். இந்தநிலையில், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை வெற்றிக்காக எல்லோரும் பங்குபெறுவோம் என கூறினார்.  அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் இரட்டை இலை வெற்றிக்காக பாடுபடுவோம் என தெரிவித்தார்.

ஓபிஎஸ்-இபிஎஸ் சந்திக்க வாய்ப்பா.?

ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் திரும்ப பெறப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், மாப்பிள்ளைக்கு திறந்த மனது உள்ளதாக பாராட்டினார். ஓ.பன்னீர் செல்வத்தோடு எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கும். போற இடத்தில் சந்திக்கலாம், சாப்பிடுற இடத்தில் சந்திக்கலாம்.  சந்திக்கலாம் என கூறினார்.  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கு.ப.கிருஷ்ணன், ஆளும்கட்சியான திமுகவை எதிர்த்து தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு பேரும் சேர்ந்து பிரச்சாரம் செய்ய போதிய அவகாசம் இல்லை. அவரவர்  இரட்டை இலை வெற்றிக்கு பாடுபடுவார்கள் என கூறினார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்.! இன்றோடு நிறைவு பெறும் வேட்புமனு தாக்கல்.! கடைசி நேரத்தில் களத்தில் இறங்கும் அதிமுக

click me!