நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி.! எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Published : Feb 07, 2023, 11:05 AM ISTUpdated : Feb 07, 2023, 11:21 AM IST
நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி.! எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

சுருக்கம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றுக்கொண்டார். அவரது பதவியேற்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில்,  வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் நீதிபதிகளாக இன்று பதிவியேற்று கொண்டனர்.இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/central-government-should-start-a-construction-work-of-madurai-aiims-hospital-says-minister-udhayanidhi-rpp354

எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்கள்

இந்நநிலையில் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை சமூகவலைதளத்தில் பேசியதாக விக்டோரியா கவுரி மீது புகார் கூறப்பட்டதையடுத்து அவரை நீதிபதியாக பதிவியேற்க வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு அவரச வழக்காக இன்று காலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது விக்டோரியா கவுரி மீது புகார் குறித்து கொலிஜியம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்த பிறகும் பதவியேற்பு விழாவிற்கு திட்டமிட்டு இருக்கக் கூடாது என மனுதாரர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

இதனை விசாரித்த நீதிபதிகள், அரசியல் பின்புலம் கொண்டவர்கள் ஏற்கனவே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள வரலாறு உள்ளது என தெரிவித்தனர். அதற்க்கு பதில் அளித்த மனுதாரர் இந்த விவகாரத்தில் அரசியல் பின்னணி குறித்து எந்த வித கேள்வியும் இல்லை. விக்டோரியா கௌரியின் வெறுப்பு பேச்சுகள்தான் கவலை அளிக்கிறது என தெரிவித்தனர். நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கு முன் விக்டோரியா கெளரியின் உரையை உச்ச நீதிமன்ற கொலிஜியம் கணக்கில் எடுத்திருக்க வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.

தள்ளுபடி செய்து உத்தரவு

இதற்க்கு பதில் அளித்த நீதிபதிகள் நான் மாணவனாக இருந்த பொழுது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்தவனாக இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். நீதிபதியாக எனது அரசியல் பார்வையை நான் இதுவரை வர விட்டதில்லை அதை விக்டோரியா கௌரி அவர்களுக்கும் பொருத்தலாம் தானே என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தற்போது உள்ள நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவிரும்பவில்லையென கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படியுங்கள்

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பா.? ஒன்றாக பிரச்சாரம் செய்வார்களா..? பரபரப்பு தகவல் கூறிய கு.ப.கிருஷ்ணன்

PREV
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!