
நகர்ப்புற உள்ளாட்சி மறைமுக தேர்தல்:
நகர்ப்புற உள்ளாட்சி மறைமுக தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க.,வினர் போட்டியிட்ட வெற்றி பெற்ற விவகாரத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, மூன்று நகர செயலர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி மறைமுக தேர்தலில் தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தி.மு.க.,வை சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்கி கூட்டணி கட்சியினரை தோற்கடித்து வெற்றி பெற்றனர். கட்சி தலைமையின் கட்டுப்பாட்டை மீறிய திமுகவினரின் இந்த செயல், கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுக்குறித்து அவசர ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைமுக தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி, பதவிகளை கைப்பற்றிய தி.மு.க.,வினர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: மத்திய அரசு திட்டங்களுக்கு பெயர் சூட்டிய மாநில அரசு...! பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை
திமுகவினர் வெற்றி:
அதன்படி கட்சி தலைமையின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு, சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, மூன்று நகர செயலர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி நகராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், தேனி நகர தி.மு.க., பொறுப்பாளர் பாலமுருகன், தன் மனைவியை நிறுத்தி கூட்டணி கட்சியை தோற்கடித்து வெற்றி பெற வைத்தார்.
அதே போல் பெரியகுளம் நகராட்சி துணை தலைவர் பதவி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கும் தி.மு.க., போட்டி வேட்பாளர் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதோடுமட்டுமல்லாமல், போடி நகராட்சி துணை தலைவர் பதவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கும் தி.மு.க., போட்டியிட்டு வெற்றியை தட்டி சென்றது. இந்த தேனி, போடி, பெரியகுளம் ஆகிய மூன்று இடங்களிலும் வெற்றி பெற்ற தி.மு.க.,வினர், கட்சி தலைமை உத்தரவிட்டும் இதுவரை தஙக்ளது பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்து உள்ளனர்.
மேலும் படிக்க:பெற்றோர்களே உஷார்.. பள்ளி வாகனத்தில் சிக்கி 4 வயது சிறுவன்.. பள்ளிக் கூடம் சேர்ந்த முதல் நாளே கொடூரம்.
திமுக நகர செயலாளர்கள் நீக்கம்:
இதனால் தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் முரளி, போடி நகரச் செயலர் செல்வராஜ் ஆகிய மூவரையும், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி, பொதுச் செயலர் துரைமுருகன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேபோல் தேனி தெற்கு மாவட்ட அனுமந்தன்பட்டி பேரூராட்சி துணை தலைவர் பதவி விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் இதுவரை தனது பதவியை ராஜினாமா செய்யாததால், அதை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் இதுக்குறித்து கட்சி தலைமை விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இச்சூழலில், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் நகராட்சி தலைவர் பதவி கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், மறைமுக தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கவுன்சிலர் ஹேமலதாவை தி.மு.க., கவுன்சிலர்கள் ஒருவர் கூட முன்மொழியாமல், தி.மு.க., கவுன்சிலர் சூர்யபிரகாஷ், போட்டியின்றி தேர்வு செய்தனர். 'கட்சி தலைமை உத்தரவை ஏற்று, பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை' என, சூர்யபிரகாஷ் கூறி வந்த நிலையில், காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, தற்காலிகமாக அவர் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: நிதிநிலை அறிக்கை ஒரு ஏமாற்றாமளிக்கும் அறிக்கை... ஓ.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!!