பெற்றோர்களே உஷார்.. பள்ளி வாகனத்தில் சிக்கி 4 வயது சிறுவன்.. பள்ளிக் கூடம் சேர்ந்த முதல் நாளே கொடூரம்.

Published : Mar 18, 2022, 06:29 PM IST
பெற்றோர்களே உஷார்.. பள்ளி வாகனத்தில் சிக்கி 4 வயது சிறுவன்.. பள்ளிக் கூடம் சேர்ந்த முதல் நாளே கொடூரம்.

சுருக்கம்

இதில் பள்ளி உரிமையாளர், ஓட்டுகள் தமிழ்ச்செல்வன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தலைமறைவாகி விட்ட்டர். இந்நிலையில் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். வேனில் குழந்தைகளை முறையாக ஏற்றி இறக்கிவிட உதவியாளர் இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

பள்ளியில் சேர்ந்த முதல்  நாளை 4 வயது சிறுவன் பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கொருக்கத்தூரில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து ஆயிரம் கனவுகளுடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பத்திரமாக வீடு வந்து சேரும்வரை உயிர் உடலில் தங்காத நிலை தான். அந்த அளவிற்கு குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதே அதற்கு காரணம். ஒவ்வொரு விபத்தும், இறப்பும் துயரம்தான். அதிலும் குழந்தைகள் என்றால் அது இதயத்தை இரண்டாக அறுத்து போட்டுவிடும். இந்த வகையில்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுருதி என்ற பெண் குழந்தை  வேன் படிக்கட்டில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்தது.

பள்ளிக்கூட பேருந்துகளை சரியாக பராமரிக்காததே  இந்த விபத்துக்கு காரணம் என  குற்றம்சாட்டப்பட்டதுடன் வேன் ஓட்டுநர், பள்ளிக்கூட தாளாளர் உள்பட பலரையும் போலீசார் கைது செய்தனர். இதை இன்னும் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அன்று முதல் இன்று வரையில் பள்ளிக்கூட வாகனங்கள் தீவிரமமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட ஆர்டிஓக்கள் வாகனங்களிட் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்பது விதியாக இருந்து வருகிறது.  வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றவா? குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் அவர்கள பத்திரமாக வாகனத்தில் ஏற்றி, பின்னர் பத்திரமாக இறக்கிவிட தேவையான உதவியாளர்கள் உள்ளனரா என்பதும் கண்காணிப்பட்டு வருகிறது. இதை கண்காணிப்பது அதிகாரிகளுக்கு கடமையாகவே உள்ளது. இப்படி இருந்தும் மீண்டும் அதேபோன்ற ஒரு துயரச் சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரங்கேறியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கொருக்கதுர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜோதி- ராணி தம்பதியர். இவர்களுக்கு நான்கு வயதில் சர்வேஷ் , விக்னேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் சிறுவன் சர்வேஷ்சை வாழைப்பந்தலில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று எல்கேஜி வகுப்பில் சேர்த்தனர். அந்த வகையில் பள்ளி முடிந்ததும் பள்ளி வாகனத்தில் சர்வேஷ் வீடு திரும்பியுள்ளான். அப்போது கொருக்கதுர் அரசு பள்ளி அருகே வாகனத்திலிருந்து சர்வேஷ் இறங்கியுள்ளார். சிறுவன் இறங்குவதற்கு முன்பாகவே வேன் டிரைவர் தமிழ்செல்வன் வேனை ஏடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த  சர்வேஷ் தலை மீது வேன் சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.

இதை பார்த்து அங்கு இருந்தவர்கள் பதறியடுத்து ஒடி வந்தனர். அதற்குள் வேன் டிரைவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். தகவலறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பள்ளி உரிமையாளர், ஓட்டுகள் தமிழ்ச்செல்வன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தலைமறைவாகி விட்ட்டர். இந்நிலையில் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். வேனில் குழந்தைகளை முறையாக ஏற்றி இறக்கிவிட உதவியாளர் இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  பள்ளிக்கூடம் சென்ற முதல் நாளே குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!