1 மணி நேரம் உல்லாசம் என கூறி அழைத்துச் சென்ற பெண்.. 5 நிமிடத்தில் அனுப்பியதால் லாரி டிரைவர் வெறிச் செயல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 20, 2021, 1:18 PM IST
Highlights

அப்போது அந்த லாரி டிரைவரிடம் புரோக்கர் வெங்கடேசன் 200 ரூபாய் கொடுத்தால்  ஒரு மணி நேரம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.இதனை கேட்ட லாரி டிரைவர்  200 ரூபாய் கொடுத்துவிட்டு  கவிதாவை அருகிலிருந்த மறைவான பகுதிக்கு  உல்லாசமாக இருப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார். 

200 ரூபாய் கொடுத்தும் உல்லாசமாக இருக்க  மறுத்ததால் விபச்சாரப் பெண் மற்றும் புரோக்கரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செயததாக லாரி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி கவிதா (45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை போலுப்பள்ளி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று  விபச்சார தொழில் செய்து வருகிறார். இவருக்கு புரோக்கராக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் (45) என்பவர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இவர்கள் இருவரும் போலுப்பள்ளி நெடுஞ்சாலை அருகே நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரியை  நிறுத்தி அந்த லாரி டிரைவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளனர். அப்போது அந்த லாரி டிரைவரிடம் புரோக்கர் வெங்கடேசன் 200 ரூபாய் கொடுத்தால்  ஒரு மணி நேரம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். 

இதனை கேட்ட லாரி டிரைவர்  200 ரூபாய் கொடுத்துவிட்டு  கவிதாவை அருகிலிருந்த மறைவான பகுதிக்கு  உல்லாசமாக இருப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்று சிறிது நேரத்திலேயே கவிதா லாரி டிரைவரிடம்  நீ கொடுத்த 200 ரூபாய்க்கு  ஐந்து நிமிடங்கள் மட்டுமே உன்னிடம் நான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட லாரி டிரைவர்  ஆத்திரமடைந்து கவிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சத்தம்  கேட்ட புரோக்கர் வெங்கடேசன் அவர்கள் இருந்த இடத்திற்கு கூச்சலிட்டபடி சத்தம் போட்டுக்கொண்டே வந்துள்ளார். இருவரும் அதிக சத்தம் போட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் சுரேஷ்குமார்  பயந்துபோய் லாரியில் இருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து கவிதாவையும் வெங்கடேசனையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

இதில் கவிதாவும், புரோக்கர் வெங்கடேசனும் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் படுகாயமடைந்த கவிதா அவருடைய கணவருக்கு தொடர்புகொண்டு  அங்கு நடந்ததைக் கூறி தாங்கள் இருவரும் பலத்த காயமடைந்து இருப்பதாகவும் தங்களை உடனே வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கவிதாவின் கணவர் அவர்கள் இருவரையும் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் புரோக்கர் வெங்கடேசன் தலையில் பலத்த காயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் கவிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,  மதுரை மாவட்டம் விராட்டிபத்து, தேனி சாலையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்  அவரிடம் நடத்திய விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன, 200 ரூயாய்க்கு ஒரு மணி நேரம் உல்லாசமாக இருப்பதற்காக தான் நான் அவர்களிடம் பணம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் இருவரும் என்னிடம் பணமும் வாங்கிவிட்டு உல்லாசமாக இருக்க மறுத்ததால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவர்களை தாக்கினேன் என்று  போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலும் நான்  ஏற்கனவே  இதேபோல் மதுரை தேசிய நெடுங்சாலையில்  சென்றபோது விபச்சார அழகி ஒருவரிடம் உல்லாசமாக இருப்பதற்காக சென்ற போது அப்போது அந்த விபச்சார பெண் கூச்சலிட்டு அவருடன் வந்தவர்கள் என்னை அடித்து பணத்தை பிடுங்கி விட்டு சென்றனர். அதனால் தற்போதும் அதே போல ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது  என்பதற்காகவே நான் இதை செய்தேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் குருபரப்பள்ளி போலீஸார் லாரி டிரைவர் சுரேஷ் குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  

click me!