வீரப்பனை வேட்டையாடியவருக்கே இந்தக் கதியா..? அமமுகவால் காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த பரிதாபம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 18, 2021, 1:20 PM IST
Highlights

சென்னை குற்ற ஆவண காப்பக கூடுதல் துணை ஆணையராக பணியாற்றிய வெள்ளத்துரை சென்னை தலைமை காவல் அலுவலகத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 

சென்னை குற்ற ஆவண காப்பக கூடுதல் துணை ஆணையராக பணியாற்றிய வெள்ளத்துரை சென்னை தலைமை காவல் அலுவலகத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

நெல்லை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றியவர் வெள்ளத்துரை.  என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டு என போற்றப்படுபவர். சர்ச்சைக்குரிய காவல்துறை அதிகாரியான வெள்ளதுரையின் மனைவி ராணி மனோ ரஞ்சிதம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் வெள்ளத்துரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது. காவல் அதிகாரி வெள்ளதுரை சென்னை தலைமை அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரப்பன் உள்ளிட்ட பல்வேறு என் கவுண்டர்களில் முக்கிய பங்காற்றிய காவல்துறை உதவி ஆணையர் வெள்ளத்துரை காத்திருப்போர் பட்டியலுக்கு வெள்ளதுரை மாற்றப்பட்டுள்ளார். 

தமிழக காவல்துறைக்கு சிம்மசொப்பணமாக இருந்த வீரப்பன் 2004 ஆம் ஆண்டு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமயிலான போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த குழுவில் இடம்பெற்றிருந்தவர் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்.  அத்துடன் சென்னை அயோத்திகுப்பம் வீரமணியை என்கவுன்டர் செய்த குழுவிலும் இருந்துள்ளார். திருச்சி, மதுரை என பல மாவட்டங்களில் பல ரவுடிகளை இவரின் தோட்டாக்கள் பதம் பார்த்துள்ளன.

click me!