காப்பி அடிக்கும் புத்தி திமுகவுடையது.. பங்கம் செய்த ஸ்டாலினை ஓங்கி அடித்த அமைச்சர் ஜெயக்குமார்..

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2021, 12:45 PM IST
Highlights

திமுகவை பார்த்து தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், படிக்காத, மக்களை சந்திக்காத திமுகவிற்கு தான் இது போன்ற எண்ணம் வரும் என்றும் விமர்சனம் செய்தார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறு வெளியிடப்பட்டுள்ளதாகவும், படிக்காத, மக்களை சந்திக்காத திமுகவிற்கு தான் காப்பி அடிக்கும் எண்ணம் வரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். 

ராயபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார், ராயபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் சைக்கிள் ரிக்‌ஷாவில் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்தி வாக்கு சேகரித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி மக்களின் நல்லாசியுடன் 7வது முறையாக ராயபுரம் தொகுதியில் போட்டியிடுவதாகவும், இந்த முறையும் அனைவரின் நல்லாதரவோடு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என உறுதிப்பட கூறினார். 

மேலும், ராயபுரம் தொகுதியில் குடிசைகள் இல்லாத அளவிற்கு ஒழிக்கப்பட்டு அடுக்கு மாடி வீடுகள் தொகுதி மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சி காலத்தில் இந்த தொகுதிக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கொரோனா காலத்தில் மக்களின் வீடுகளுக்கே சென்று நலத்திட்டங்கள் வழங்கியதாகவும், கொரோனா காலத்தில் எங்களின் உயிரை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றியதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான் என்றும், 
சமூக நலத்திட்டம் என்றால் அது அதிமுக தான் எனவும், அதிமுக அனைத்து திட்டங்களையும் வழங்கி வருவதாகவும், மக்களின் மன நிலை தெரிந்து தான் தேர்தல் அறிக்கை வெளியிடபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

திமுகவை பார்த்து தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், படிக்காத, மக்களை சந்திக்காத திமுகவிற்கு தான் இது போன்ற எண்ணம் வரும் என்றும் விமர்சனம் செய்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிகாட்டிய அவர், அதற்குறிய நடவடிக்கையை அரசு எடுத்துவருகிறது என்றும், மரணத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறினார். திமுக ஆட்சிக்கு வர போவதில்லை என கூறிய அவர், எதிர்கட்சியாக இருக்கும் போதே பல பிரச்சனைகளை சமூக வலைத்தளங்களில் பார்த்ததாகவும், திமுக அராஜக கட்சி, மக்களை சந்திக்காத கட்சி, பண்பாடு இல்லாத வகையில் தான் திமுக இருந்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
 

click me!