சென்னையில் மீண்டும் லாக் டவுன்..? மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி பதில்..

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2021, 12:29 PM IST
Highlights

சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அதேபோல தொடர்ந்து கொரோனா நோய் பரவி வருவதன் எதிரொலியாக லாக் டவுன் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு வரும் தகவலில் உண்மையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை வாட்டி வதைத்து வந்த நிலையில், பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கும் மேலாக தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

நாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை  உள்ளிட்ட நகரங்களில் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றில் மக்கள் கூட்டம் கூட்டமாக பங்கெடுத்து வருகின்றனர். மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா தொற்று வேகமாக பரவ கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் பொது இடத்தில் கூடும் மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை  பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் நெருங்கி வருவதால் கொரோனா மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 945 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில், பத்தாயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவும் சென்னையில் கொரனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகும், கொரோனா தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏதும் வராது எனவும் கூறியுள்ளார். சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக 350 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். சென்னையில் மொத்தம் 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியமாக உள்ளது எனவும், கொரோனா அதிகரித்து வருவதால் லாக்டவுன் போடப்படும்  என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

 

click me!