பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 11.28 கோடி பறிமுதல்.. சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2021, 11:40 AM IST
Highlights

பறிமுதல் செய்யப்படும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணம், அல்லது 10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள், வருமானவரித் துறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் இதுநாள் வரை முறையாக ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 11.28 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கம் வெள்ளி உட்பட பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

நடைபெறவிருக்கும் 2019 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு செயல்முறை மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி முறையான ஆவணங்கள் இன்று கொண்டு செல்லப்படும். 10 ஆயிரத்திற்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 50,000 மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணம், அல்லது 10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள், வருமானவரித் துறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீட்டு குழுவிடம் தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும். 

மேற்படி நிகழ்வுகளை சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிக்க ஒவ்வொரு குழுவிலும் உதவி செயற்பொறியாளர் தலைமையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர், காணொளி பதிவு செய்பவர் மற்றும் இரண்டு காவலர்கள் அடங்கிய 16 பறக்கும் படையினர் மற்றும் 16 நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் 48 எஃப்.எஸ். டி,  48 எஸ்.எஸ். டி குழுக்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்பொழுது 16-3-2021 முதல் மேலும் 96 பறக்கும் படை குழு நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேளச்சேரி இரயில் நிலையம் அருகில் 16-3 2021 அன்று நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவண 11 கிலோ தங்கமோ 46 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டு, மாம்பலம்-கிண்டி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் 27-2-2021 முதல் செயல்பட்டு வருகிறது. 6-3-2021 வரை குழுவானது புகார் அடிப்படையில் மற்றும் வாகன சோதனையின்போது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 84,14,203 ரொக்கப் பணமும் 24 கிலோ தங்கமும் 80 கிலோ வெள்ளியும், 1175 கிலோ குட்கா மற்றும் பொது விநியோகத் திட்ட அரிசி 5.700 கிலோ வரை கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள ரொக்கம் மற்றும் இதர பொருட்களின் மதிப்பு 11,77,49, 062  என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
 

click me!