டெல்லிக்கு பறக்கும் ஆளுநர்.. சூடுபிடித்த குடியரசு தலைவர் தேர்தல் களம் - பாஜக பிளான் இதுதானா ?

By Raghupati RFirst Published Jun 21, 2022, 11:43 AM IST
Highlights

President election : 2022 குடியரசு தலைவர் தேர்தல் வரவிருக்கின்ற சூழ்நிலையில் தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் Vs ஆளுனர்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மொத்தம் 22 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு ஆளுநர் ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி நாளை காலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தற்போது தேசிய அளவில் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. வரும் 16ம்தேதி எதிர்க்கட்சிகள் சார்பாக மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டம் ஒன்றும் நடத்தப்பட உள்ளது. பாஜக அல்லாத மாநில கட்சிகளுக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க : 2024 தேர்தல்.. தமிழ்நாட்டுல இருந்து 25 எம்பிக்கள்.. இதுதான் டார்கெட்! திமுகவை அட்டாக் செய்யும் அண்ணாமலை

ஆளுனர் டெல்லி பயணம்

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பாகவும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பல்வேறு கட்சிகள் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முதல்வர் ஸ்டாலினும் மூத்த திமுக உறுப்பினர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். 2022 குடியரசு தலைவர் தேர்தல் வரவிருக்கின்ற சூழ்நிலையில் தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பாஜக, காங்கிரஸ் என தேசிய கட்சிகள் மட்டுமல்லாமல் மம்தா,சரத் பவார் என தலைவர்கள் அனைவரும் குடியரசு தலைவர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தீவிரமாக யோசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நாளை காலை 7 மணிக்கு செல்லவிருக்கிறார்.முன்னதாக இன்று செல்லவிருந்த பயணம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க : அதிமுக விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட வேண்டும்.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்ட புது குண்டு!

click me!