சட்டப்பேரவை நிகழ்வை செல்போனில் வீடியோ பதிவு.! ஆளுநரின் விருந்தினர் மீது நடவடிக்கையா.? அவை உரிமை குழு விசாரணை

By Ajmal KhanFirst Published Jan 25, 2023, 1:21 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை நடைபெற்ற போது முக்கிய விருந்தினர் மாடத்தில் இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம் அவை உரிமை மீறலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இது  குறித்து விசாரணை நடத்த துணை சபாநாயகர்மான பிச்சாண்டி தலைமையில் உரிமை குழு விசாரணை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி உரையாற்றினார். அப்போது தமிழக அரசு ஒப்புதல் அளித்த வாக்கியத்திற்கு பதிலாக புதிய வார்த்தைகளை சேர்த்தும், வாக்கியங்களை நீக்கியும் படித்தார். இதற்க்கு தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். அப்போது சட்டப்பேரவை அவை மாடத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் இருக்கையில் இருந்த ஆளுநரின் விருந்தினர் ஒருவர் அவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அவை உரிமை மீறல் பிரச்சனை எழுப்பினார்.

திமுகவோடு கை கோர்த்து அதிமுக,பாஜகவை எதிர்க்கும் கமல்..! இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்க்கு ஆதரவு.! அதிரடி அறிவிப்பு

ஆளுநரின் விருந்தினர்- செல்போன் பதிவு

இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, இந்த பிரச்சனையில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் இதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை  குழுவிற்கு உத்தவிட்டிருந்தார்.  இந்த அவை உரிமை குழுவின் தலைவராக துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளார். இந்த குழுவில்  அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், ஈஸ்வரப்பன், இ கருணாநிதி, சிவகுமார் உள்ளிட்ட 16 உறுப்பினர்கள் உள்ளனர் ‌.

ஆர்எஸ்எஸ் கொள்கையை திணிக்க முழு மூச்சாக செயல்படும் ஆர்.என்.ரவி! திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை-செல்வப்பெருந்தகை

உரிமை மீறல் விசாரணை

ஆனால் இன்று நடைபெற்ற அவை உரிமை மீறல் குழு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டி, நல்லதம்பி, ஈஸ்வரப்பா, பிரின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செல்போன் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து ஆளுநரின் விருந்தினருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்.! காங்கிரஸ்,விசிக,கம்யூனிஸ்ட் அதிரடி அறிவிப்பு

click me!