திமுகவோடு கை கோர்த்து அதிமுக,பாஜகவை எதிர்க்கும் கமல்..! இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்க்கு ஆதரவு.! அதிரடி அறிவிப்பு

Published : Jan 25, 2023, 12:36 PM ISTUpdated : Jan 25, 2023, 02:11 PM IST
திமுகவோடு கை கோர்த்து அதிமுக,பாஜகவை எதிர்க்கும் கமல்..! இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்க்கு ஆதரவு.! அதிரடி அறிவிப்பு

சுருக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து திமுக கூட்டணி கட்சி தலைவர்களை ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து தனக்கு ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக்கொண்டார். அப்போது தங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்பு மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை ஆலோசித்து முடிவெடுப்போம் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

ஈவிகேஸ்க்கு ஆதரவு- கமல்ஹாசன்

குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் வாக்குகள் பெற்று இருந்தது. எனவே அந்த வாக்குளை கவர்வதற்காகவே ஈவிகேஎஸ் இளங்கோவன் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். இந்தநிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

தேர்தல் பொறுப்பாளரை நியமித்த கமல்

ஈவிகேஎஸ் வெற்றிக்காக தானும் தனது கட்சி உறுப்பினர்களும் வேண்டியதை செய்வோம் என தெரிவித்தார். 18வயது பூர்த்தி அடைந்த அணைவரும் தேர்தல் நாளில்  ஈவிகேஎஸ்க்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேர்தல் பொறுப்பாளாராக அருணாச்சலம் என்பவரை நியமிப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார் 

இதையும் படியுங்கள்

ஜெயலலிதா பயன்படுத்திய பட்டுச் சேலைகள், ஆபரணங்கள் ஏலம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
 

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!