ஆர்எஸ்எஸ் கொள்கையை திணிக்க முழு மூச்சாக செயல்படும் ஆர்.என்.ரவி! திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை-செல்வப்பெருந்தகை

By Ajmal KhanFirst Published Jan 25, 2023, 11:42 AM IST
Highlights

தமிழகம், தமிழ்நாடு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமால் தடுப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

மசோதாவை காலதாமதம் செய்யும் ஆளுநர்

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடியரசு தினத்தையொட்டி நாளை (26.01.2023) தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். 

நாங்கள் யார் என்பது இடைத்தேர்தல் மூலம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை! அப்படினா இபிஎஸ்க்கு ஆதரவா? அண்ணாமலை

ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு

உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கும், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள் மேலும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.  கடந்த 23.01.2023 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளின் போது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதவேண்டுமென பேசியிருக்கிறார். இவர் ஆர்.எஸ்.எஸ். முகமாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகம், தமிழ்நாடு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமால் தடுக்கிறார்.  

ஜெயலலிதா பயன்படுத்திய பட்டுச் சேலைகள், ஆபரணங்கள் ஏலம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தேநீர் விருந்து புறக்கணிப்பு

ஆர்எஸ்எஸ் கொள்கைளை திணிப்பதில் முழு மூச்சாக செயல்படும் இவர் திருந்துவதற்கு வாய்ப்பேதுமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட  நினைக்கும் பாசிச பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களிலாவது ஆளுரின் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டுமென கேட்டுக்கொள்வதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்.! காங்கிரஸ்,விசிக,கம்யூனிஸ்ட் அதிரடி அறிவிப்பு

click me!