ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்.! காங்கிரஸ்,விசிக,கம்யூனிஸ்ட் அதிரடி அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Jan 25, 2023, 10:52 AM IST
Highlights

குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கவுள்ள தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்க இருப்பதாக அறிவித்த நிலையில், தற்போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசும் ஆளுநரும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி தேநீர் விருந்தை புறக்கணித்தன. இந்தநிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறுவதும், தமிழ்நாட்டிற்கு தமிழகம் என்ற பெயர் தான் சரியாக இருக்கும் என தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தமிழ்நாடு, அமைதி பூங்கா, அண்ணா,பெரியார், அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை பேச தவிர்த்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி பதிலடி கொடுத்தார்.

நாங்கள் யார் என்பது இடைத்தேர்தல் மூலம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை! அப்படினா இபிஎஸ்க்கு ஆதரவா? அண்ணாமலை

குடியரசு தினம்- தேநீர் விருந்து

இதனையடுத்து ஆன்லைன் மசோதா மீது தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு ஒப்படைத்த நிலையில் அதற்க்கு எந்தவித அனுமதியும் கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை சார்பாக தேநீர் விருந்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை விடுதலை சிறுத்தைகள் புறக்கணித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட திருமாவளவன் தமிழ்நாட்டு நலன்களைக் கருத்தில் கொண்டும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் தற்போதைய ஆளுநர் அவர்களை இந்திய ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளதோடு ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளது.

பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம்.!மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை.! அரசுக்கு எதிராக சீறும் வேல்முருகன்

புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்

இதேபோல காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையும் ஆளுநரின் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்திய கம்யூனிஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க இருப்பதாக கூறியுள்ளனர். எனவே ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் மட்டும் பங்கேற்கவுள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஜெயலலிதா பயன்படுத்திய பட்டுச் சேலைகள், ஆபரணங்கள் ஏலம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

click me!