நாங்கள் யார் என்பது இடைத்தேர்தல் மூலம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை! அப்படினா இபிஎஸ்க்கு ஆதரவா? அண்ணாமலை

By vinoth kumarFirst Published Jan 25, 2023, 9:52 AM IST
Highlights

அமைச்சர்கள் படை பரிவாரத்தோடு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது விசித்திரமான தேர்தலாக உள்ளது என விமர்சனம் செய்துள்ளார். இடைத்தேர்தலில் 80% ஆளும் கட்சி தான் ஜெயிப்பார்கள். இடைத்தேர்தலை பொறுத்தவரை பணத்தை கொட்டி ஆளும் கட்சியினர் வெல்வார்கள். 

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை;- ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னே அமைச்சர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதம் கூட ஆகவில்லை. அதுக்குள்ளேயே திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. 

இதையும் படிங்க;- சேர் எடுத்து வர எவ்வளவு நேரம் டா.. டென்ஷன் ஆகி கட்சி நிர்வாகி மீது கல்லை எறிந்த அமைச்சர் நாசர்..!

அமைச்சர்கள் படை பரிவாரத்தோடு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது விசித்திரமான தேர்தலாக உள்ளது என விமர்சனம் செய்துள்ளார். இடைத்தேர்தலில் 80% ஆளும் கட்சி தான் ஜெயிப்பார்கள். இடைத்தேர்தலை பொறுத்தவரை பணத்தை கொட்டி ஆளும் கட்சியினர் வெல்வார்கள். ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு பாஜக தங்களை நிரூபிக்க வேண்டுய அவசியம் இல்லை.

பாஜக கூட்டணியில் பலமான கட்சி அதிமுக. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இருக்கக்கூடாது. திமுகவின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டும். 2024 தேர்தல் தான் பாஜக பலப்பரீட்சைக்கான தேர்தல். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். 

இதையும் படிங்க;- வெறும் வாயில் வடை சுடும் அண்ணாமலை! தைரியம் இருந்தால் இடைத்தேர்தலில் போட்டியிடுங்க.. எம்.பி. மாணிக்கம் தாகூர்.!

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் நினைப்பதாக தெரிவித்த ஓபிஎஸ் கருத்துக்கு காலம் வரும் போது பதில் சொல்வேன். தேர்தல் ஆணையம் என்னதான் கண்காணிப்பு குழு அமைத்தாலும் அமைச்சர்கள் 20 மாதங்கள் சம்பாதித்த பணம் வெளியே வரத்தான் செய்யும் நீங்களும் பார்ப்பீர்கள். குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம் என்றார்.

மேலும், பாஜக சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பேசிய நிலையில் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது ஒரே ஒரு நாள் சேது சமுத்திர திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்த பின்னர் அது சாத்தியம் இல்லை என்பதால் அந்த திட்டம்  பற்றி பேசுவதை திமுகவினர் நிறுத்திவிட்டனர் திமுகவின் திட்டங்கள் அனைத்தும் திடமானதாக இல்லை என அண்ணாமலை கூறினார்.

click me!