எடப்பாடி பழனிசாமியை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள்.. ஓபிஎஸ்க்கு ஆதரவு அளித்த முக்கிய கட்சி..!

By vinoth kumarFirst Published Jan 25, 2023, 11:59 AM IST
Highlights

ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். 

எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார போக்கால், அதிமுக தனது பாரம்பரிய வாக்குகளை கிடைக்காது என இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு கூறியுள்ளார்.

ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால், தனது கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள தலைவர்களை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மாறி மாறி சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு சந்தித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தனியரசு;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு. எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார போக்கால், அதிமுக தனது பாரம்பரிய வாக்குகளை கிடைக்காது. 

எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வலிமை பெற வைக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியை ஒன்றரை கோடி தொண்டர்களும் மற்றும் வாக்காளர்களும் நிராகரிப்பார்கள். ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி சிதறாமல் உள்ளது. அதிமுக சிதறி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்க வேண்டும் என கூறியுள்ளேன் என்றார்.

click me!