தந்தை பெரியாரின் இதயத்தில் அன்று தைத்த முள் இன்று ஆறியது... கனிமொழி ஆசுவாசம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 14, 2021, 1:06 PM IST
Highlights

இந்த சதி வேலைகளை எல்லாம் முறியடித்து பல்வேறு சாதிகளைச் சார்ந்த 58 பேருக்கு பணிநியமனம் அளித்துள்ள முதல்வருக்கு வாழ்த்துகள். 

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உள்பட வெவ்வேறு சாதிகளை சேர்ந்த58 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

1970 ல் தலைவர் கருணாநிதியால் கொண்டு வந்த சட்டம் தற்போது 51 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.,யும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தந்தை பெரியாரின் இதயத்தில் முள்ளாய்த் தைத்தது இன்று ஆறியது. தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமூக நீதிக்கான சட்டத்தை நிறைவேற்றினார்.

 

ஆனால் அதை எதிர்த்து சாதிய சக்திகள் சமூக, அரசியல் மற்றும் சட்ட சிக்கல்கள் பலவற்றை உருவாக்கினார்கள். இந்த சதி வேலைகளை எல்லாம் முறியடித்து பல்வேறு சாதிகளைச் சார்ந்த 58 பேருக்கு பணிநியமனம் அளித்துள்ள முதல்வருக்கு வாழ்த்துகள். 

இந்த போராட்ட வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அமைச்சர் திரு. சேகர் பாபு,  வழக்கறிஞர்கள், சமூகப்போராளிகள், ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி’’எனத் தெரிவித்துள்ளார். 

click me!