இனி பனைமரங்களை இஷ்டத்துக்கு வெட்டகூடாது.. மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி அவசியம்.. வேளாண் பட்ஜெட்டில் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 14, 2021, 12:13 PM IST
Highlights

தொடர்ந்து பனைமரங்கள் வெட்டப்பட்டு வருவதால் தமிழகத்தில் நிலத்தடி நீர் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வந்தனர் இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் போன்ற கட்சிகள் பனை விதைகளை ஊன்றும் இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனை கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படும் என விவசாயத் துறை அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என விவசாய சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களைத் தொடர்ந்து  தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக விவசாயத் துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 

விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார், பொது பட்ஜெட்டை போலவே இந்த பட்ஜெட்டும் டிஜிட்டல் பட்ஜெட்டாக (காகிதம் இல்லாத பட்ஜெட்) தாக்கலாகி வருகிறது. பட்ஜெட் உரையை வாசிக்க துவக்கியவுடன், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கை ஆக்குவதாக கூறி அமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதேபோல் தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் வேளாண் குடிகளின் கருத்தைக் கேட்டு இந்த பட்ஜெட் தாயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல தமிழகத்தில் இயற்கை விவசாய வேளாண் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை வேளாண்மை உரங்கள் வழங்க மானியம் வழங்கப்படும் என அறிவித்தார். 

எங்கெல்லாம் இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு இயற்கை விவசாயிகள் என சான்று வழங்கப்படும் என கூறினார். அதேபோல தமிழர்களின் அடையாளமும், பண்டைய தமிழர்களின் பாரம்பரிய தொழிலான பனை உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், பனை வளர்ப்பு, அதனை ஊக்குவிக்கும் விதமாக பனை விதைகள் மற்றும் பனை விதைகளுக்கு மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனை கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பனை மேம்பாடு இயக்கம் தொடங்கி, பனைமரங்களை பாதுகாப்பதுடன், பனை மரத்தை வெட்டும்போடு ஆட்சியரின் அனுமதி பெறுவது அவசியம் என்றும் அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தொடர்ந்து பனைமரங்கள் வெட்டப்பட்டு வருவதால் தமிழகத்தில் நிலத்தடி நீர் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வந்தனர் இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் போன்ற கட்சிகள் பனை விதைகளை ஊன்றும் இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர். பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பனை விதைகளை நடுவதை ஊக்குவித்து வருகின்றனர், இந்நிலையில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள தமிழக அரசு சுற்றுச்சூழலை காப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது, அதன் ஒரு பகுதியாகவே தமிழர்களின் பாரம்பரிய விவசாய முறைகளில் ஒன்றான பனை விதைகளை நடுவது மற்றும் அதை பாதுகாக்கப்படும் அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது. 

 

click me!