தமிழகத்தில் 50 லட்சம் விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி... வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Aug 14, 2021, 11:21 AM IST
Highlights

50 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

50 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்து வருகிறார். அதன்படி, ‘’குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர். கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இயற்கை எரு தயாரிப்பு, விளை பொருள் ஏற்றுமதி, வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடுதல் போன்ற தொழில்கள் செய்ய வழிவகை செய்யப்படும். மழை குறைவான பகுதிகளில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் சாகுபடி பயிற்சி, சந்தைப்படுத்த வசதிகள் செய்யப்படும். சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும். சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.12.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் அமைக்கப்படும்’’ என அவர் தெரிவித்தார். 
 

click me!