மாஸ் அறிவிப்பு... இந்தியாவிலேயே முதல்முறை... விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்த தமிழக அரசு..!

By Thiraviaraj RMFirst Published Aug 14, 2021, 10:59 AM IST
Highlights

 இந்தியாவில் இதுவரை எந்த மாநித்திலும் இல்லாத அளவில் தமிழக வரலாற்றில் முதல் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் யாரும் எதிர் பார்த்திராத வகையில் பல அறிவிப்புகள் விவசாயிகளை மகிழ்ச்சி படுத்தும் எனக் கூறப்படுகிறது. 

விவசாயப் பெருமக்களின் நெடுங்காலத் துயரை துடைக்கின்ற வகையிலும், விவசாயத் துறையினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற வகையிலும், இந்தியாவில் இதுவரை எந்த மாநித்திலும் இல்லாத அளவில் தமிழக வரலாற்றில் முதல் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதில் யாரும் எதிர் பார்த்திராத வகையில் பல அறிவிப்புகள் விவசாயிகளை மகிழ்ச்சி படுத்தும் எனக் கூறப்படுகிறது. 

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் உழவர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இதுகுறித்து, ‘’பனைமரத்தின் பரப்பு வெகுவாக குறைவதால் திட்டத்தை செயல்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம் தொடங்கப்படும். 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும். பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம். வேளாண்மை உழவர் நலத்துறை என பெயர் மாற்றம். தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கு என்று தனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.  

ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகம் ரூ.2,060 ஆகவும், சாதாரண ரகம் ரூ.2,015 ஆகவும் கொள்முதல் செய்யப்படும்.  இதன்மூலம்  6 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். இயற்கை வேளாண் திட்டத்திற்கு ரூ.33.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.62 கோடியில் ஒன்றிய-மாநில நிதியில் செயல்படுத்தப்படும். பயிறு வகைகளை விவசாயிகள் வரப்புகளில் வளர்க்கவும், ஊடுபயிராக வளர்க்கவும் மானியம் அளித்து ஊக்கப்படுத்தப்படும். 

நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும். உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது . அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும்.  இந்த திட்டம் 52.2 கோடி செலவில் மத்திய  - மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்’’என அவர் தெரிவித்துள்ளர். இந்த அறிவிப்புகள் விவசாயிகளை மகிழ்ச்சிப்படுத்துவதாகவும், தமிழகத்தில் விவசாயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் எனவும் கருதப்படுகிறது. 
 

click me!