இரவில் வந்த அதிர்ச்சி செய்தி.. உடைந்து கதறிய ஓபிஎஸ்..

Published : Aug 14, 2021, 10:51 AM ISTUpdated : Aug 14, 2021, 10:53 AM IST
இரவில் வந்த அதிர்ச்சி செய்தி.. உடைந்து கதறிய ஓபிஎஸ்..

சுருக்கம்

இவருடைய இறப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக ஆன்மீகவாதிகளுக்கு பேரிழப்பு, குருமகாசன்னிதானம் அருணகிரிநாதர் அவர்களை இழந்து வாடும் அவரது சீடர்கள், பக்தர்கள் ஆன்மீகப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டின் தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் அவர்கள் நேற்று இரவு முக்தி அடைந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.1975ஆம் ஆண்டு மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற குருமகாசன்னிதானம் அருணகிரிநாதர் அவர்களுக்கு பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவம் உண்டு. 

1980ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகளாக மதுரை ஆதீனத்தின் தலைமை பொறுப்பில் இருந்த குருமகாசன்னிதானம் அருணகிரிநாதர் அவர்கள் பல்வேறு கோயில்களுக்கு கும்பாபிஷேகங்களை நடத்தியதோடு, ஏராளமான பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றி மாணவ மாணவியரின் மனங்களில் தெய்வீகத்தை பரப்பிய பெருமைக்குரியவர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா  அவர்களிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்ததோடு மாண்புமிகு அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர். 

இவருடைய இறப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக ஆன்மீகவாதிகளுக்கு பேரிழப்பு, குருமகாசன்னிதானம் அருணகிரிநாதர் அவர்களை இழந்து வாடும் அவரது சீடர்கள், பக்தர்கள் ஆன்மீகப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்தில் தமிழகத்தில் கால்பதிக்கும் பிரதமர் மோடி-ராகுல் காந்தி.. களைகட்டும் அரசியல் களம்!
திமுகவிடம் சில தலைவர்கள் வாங்கி தின்கிறார்கள்..! ஸ்டாலினை தொடர்ந்து மிரட்டும் காங்கிரஸ்..!