அதிமுகவில் உட்கட்சி மோதல் உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க உத்தரவிட கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து தள்ளுபடி செய்துள்ளது.
இரட்டை இலையை முடக்க வேண்டும்
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து பொதுக்குழு தொடர்பாக இரண்டு தரப்பும் மாறி, மாறி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இந்தநிலையில் உட்கட்சி மோதல் காரணமாக அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினரான பி. ஏ.ஜோசப் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விளம்பரத்திற்காக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி 25 ஆயிரம் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஓபிஎஸ் சந்தோஷத்திற்கு செக் வைக்கும் இபிஎஸ்...! பொதுக்குழு தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு
எச்சரிக்கை விடுத்த நீதிபதி
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் சென்னை உயர்நீதிமன்றம எவ்வளவு தொகை அபராதம் விதித்துள்ளது? என தலைமை நீதிபதி என்வி ரமணா கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில் முகாந்திரம் இல்லாத இவ்வழக்கில் கூடுதலாக 25,000 என சேர்த்து மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்