சசிகலா, டிடிவி அதிமுகவில் இணைய வேண்டும்...! இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்து கூடவே ஆப்பு வைக்கவும் தயாரான ஓபிஎஸ்..!

By Ajmal KhanFirst Published Aug 18, 2022, 11:53 AM IST
Highlights

நான்கரை ஆண்டு காலம் அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பயணித்த நிலை மீண்டும் வர வேண்டும் என்பதே எனது தலையாய கோரிக்கை என தெரிவித்துள்ள ஓபிஸ், கட்சிக்காக  உழைத்த சின்னம்மாவையும் , டிடிவி தினகரைனையும் அதிமுகவில் இணைக்கலாம் என கூறியுள்ளார்.
 

ஒற்றை தலைமை- அதிமுகவில் மோதல்

கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து இந்த பொதுக்குழவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு ஓபிஎஸ் தரப்பு உற்சாகம் அடைய வைத்தது, இதனையடுத்து கோயில்களுக்கு சென்று வழிபட்ட ஓ.பன்னீர் செல்வம், சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  அதிமுக எம்ஜிஆரால் தொண்டர்களால் , தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்டது, எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை அவரை யாராரும் வெல்ல முடியவில்லை. எம்ஜிஆர் மறையும்போது இருந்த 17லட்சம் உறுப்பினர்களை , ஒன்றரை கோடிக்கு மேற்ப்பட்ட தொண்டர்களை கொண்ட இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார்.  16 ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகத்தை வைத்திருந்தார்.   கழகம் ஒன்றுபட்டு சனநாயக ரீதியல் தேர்தலை சந்தித்தபோது தமிழகத்தில் எந்த சக்தியும் அதிமுகவை வெல்ல முடியாத நிலை இருந்தது. 

ராமச்சந்திரன்.. ஜெயலலிதா.. ஜெயச்சந்திரன்.. அதிமுகவை காக்கும் ரூபங்கள்.. புல்லரிக்கும் ஓபிஎஸ் மகன்..!

இபிஎஸ் உடன் 4 ஆண்டுகள் பயணித்தோம்

தற்போது சிறிய சிறிய பிர்ச்சனைகளாலும் , எங்களுக்குள் கருத்து வேறுபாட்டாலும் திமுக ஆளும் கட்சியாகும் சூழல் ஏற்பட்டு விட்டது. 
எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது , அவற்றை மனதில் இருந்து அப்புறப்படுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும். மீண்டும் ஆளும் நிலைக்கு அதிமுக வர வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் , எங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கழக ஒற்றுமையையே அனைவருக்கும் பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.  எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டாதல்தான் திமுக உருவானது. அதன் பிறகு ஆளும் பொறுப்பை அதிமுக ஏற்றது. சனநாயக ரீதியில் ஆளுங்கட்சிக்கு உரிய  எதிர்கட்சியாக மக்கள் விரோத போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல்அரசியல் கட்சியாக இருக்கும்.  நான்கரை ஆண்டு காலம் அன்பு சகோதரர் எடப்பாடியுடன் பயணித்தோம். மீண்டும் அந்த நிலை வரவேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்கை. 

விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டும் ஸ்டாலின்.! நம்ப வைத்து ஏமாற்றுவது தான் சமூக நீதியா.? அண்ணாமலை ஆவேசம்

சசிகலா, தினகரன் இணைய வேண்டும்

தர்மயுத்தத்தின் பிறகு கூட்டுத் தலைமைப்படி , குறையே இல்லாமல் இருவரும் இணைந்து பயணித்தோம். ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவான பிறகு எம்ஜிஆர் எண்ணத்தில் உருவான இயக்கத்தை தலைமை தாங்குவோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் சட்ட விதிப்படி நடந்தது. இந்திய தேர்தல் ஆணையமும் அதை ஏற்றது.  எங்களது எண்ணம் ...செயல் ,  இணைப்பு இணைப்பு இணைப்புதான்.  தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் எங்களுக்கு  இல்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அவை தொலையட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும். கட்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் இணைக்கலாம். யாராக இருந்தாலும் என்ற வார்த்தையில் சின்னம்மாவும் , டிடிவி தினகரனும் இருக்கின்றனர் ". என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் சந்தோஷத்திற்கு செக் வைக்கும் இபிஎஸ்...! பொதுக்குழு தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு

 

click me!