
இன்றைய தமிழக அரசியலில் மிக முக்கியமான பங்கு வகிப்பது காவல்துறை. ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சாதாரண பொதுமக்களைத்தான் எரிச்சலில் விட்டுள்ளனர் என நிலைத்தால். நாட்டை காக்கும் காவலர்களையும் வஞ்சித்து கொண்டிருக்கிறது என்பது இந்த உளவுத் துறை அதிகாரி சிவராமனின் முகநூல் பதிவு உணர்த்தியுள்ளது.
தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்; ’’இன்றோடு எனக்கு ஆய்வாளர் பதவி உயர்வு வரப்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நாள். ஒரு அற்பமான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் விசாரணை அதிகாரி நடுநிலை பிறழ்ந்து தன் சமூகத்திற்கு ஆதரவாக நடந்து கொண்டதாலும்,நான்கு ஆண்டுகளாக உள்துறையில் முதன்மை செயலாளர் அவர்களின் அதீத பணிச்சுமையின் காரணமாக (?) கோப்பு நிலுவையிலேயே உள்ளதாலும் மிகுந்த மன உளைச்சலுடன் இந்த ஆண்டிலாவது பதவி உயர்வில் சென்றுவிடமாட்டோமா என்று ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றேன். தர்மம் ஒரு நாள் கண்டிப்பாக வெல்லும் என்றாலும் செய்யாத தவறுக்காக ஆறு ஆண்டுகளாக நான் அனுபவித்து வரும் மன வேதனைக்கு யார் பொறுப்பு. என் பரிதாபகர நிலை என் எதிரிக்கு கூட வரக்கூடாது. என் மன வேதனைக்கு சற்று ஆறுதலாக, எந்த வித உள்நோக்கமும் இன்றி வெளியிடும் பதிவு.
வெளிப்படையான இந்த முகநூல் பதிவுக்கு சமூக வலைதளங்களில் இன்றைய தமிழக அரசின் இந்த அவலநிலை எப்போது மாறும் என கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.