சசிகலாவின் அரசியல் முழுக்குக்கு காரணம் துரோகி டி.டி.வி.தினகரன்தான்... கொந்தளிக்கும் திவாகரன்..!

Published : Mar 04, 2021, 11:00 AM IST
சசிகலாவின் அரசியல் முழுக்குக்கு காரணம் துரோகி டி.டி.வி.தினகரன்தான்... கொந்தளிக்கும் திவாகரன்..!

சுருக்கம்

சசிகலாவின் விருப்பப்படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பமும் எனத் தெரிவித்துள்ளார் அவரது சகோதரரான  திவாகரன்.  

சசிகலாவின் விருப்பப்படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பமும் எனத் தெரிவித்துள்ளார் அவரது சகோதரரான  திவாகரன்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘’சசிகலாவின் முடிவை முழுமனதோடு வரவேற்கிறேன். சசிகலாவின் துரோகிகள் வெளியில் இல்லை. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள். அவரைச் சுற்றியுள்ள டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரால் தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை விட அவருடைய உடல் நலனே முக்கியம்.

டி.டி.வி.தினகரன் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதும், அமமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக வரவேண்டும் என்று தினகரன் தெரிவித்ததும் சிறுபிள்ளைத் தனமானது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது, தினகரன் பேசியது இணைப்பு முயற்சியில் ஈடுபட்ட அதிமுகவினரின் கோபத்தை அதிகரித்திருக்கும்.

இது கூட சசிகலாவின் அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம். சசிகலா அவர்களின் விருப்பப்படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பமும்” எனத் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!