
எடப்பாடி பழனிசாமி குறித்து தான் பேசியதுபோன்று வெளியான ஆடியோ தான் பேசியது இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை பக்கம் நிற்பதாகவும், தலைவர்கள் பணத்தின் பக்கம் நிற்கின்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை. சி.வி சண்முகம் கையில் சாதி அடிப்படையில் 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள 42 எம்.எல்.ஏக்களில் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பக்கம் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக திமுகவை விமர்சிப்பதில்லை. ஒற்றைத் தலைமைக்கு வர எடப்பாடியாருக்கு எதிராக கே.பி.முனுசாமி சதி செய்ததாகவும் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க;- ஆடியோ அரசியல்.. இபிஎஸ் ஆதரவு தலைவர்களை நாரடித்த பொன்னையன்.. பொன்னையனுக்கும் அன்வர் ராஜா கதியா.?
ஆனால், வெளியான ஆடியோ போலியானது என்று பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். அதில், அந்த ஆடியோவை நானும் கேட்டேன் 100% பொய்மை நிறைந்தது வாய்ஸ் மாடுலேஷன் டெக்னாலஜி உலகத்தையே ஆட்டிப்படைப்பது மிமிக்கிரி பயன்படுத்தி எனக்கு களங்கம் உருவாக்க என் மூலமாக எடப்பாடி தலைமையேற்றுள்ள அதிமுகவை களங்கம் பிறப்பிக்க திட்டமிட்டு பொய்யாக வெளியிடப்பட்டுள்ள பொய் செய்தி என்னுடைய குரலும் அல்ல என்னுடைய கண்டன்டும் அல்ல. வாங்க போங்க என்ற பண்பை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய நபர் நான் கொச்சையாக அருவருக்கத்தக்க வார்த்தையில் திட்டுவது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் அப்பட்டமான பொய்.
இந்த ஆடியோவை வெளியிட்டவர்களுக்கு கட்டாயம் காலம் பதில் சொல்லும் ஓபிஎஸ் இபிஎஸ் ஐ ஒன்று சேர்த்த பணியில் பிரதான பங்கு நான் வகுத்திருக்கிறேன். என்னை தாக்குவதற்கு காரணம் என் மூலமாக செய்தி வெளியே வந்தால் மக்கள் தொண்டர்கள் நம்புவார்கள் என்று இயக்கத்திற்கு எதிரான எதிரி இத்தகைய சூழ்ச்சியை செய்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மீது எனக்கு பெரிய மரியாதையுள்ளது. திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது என்ற அளவுக்கு எடப்பாடி புகழ் இமயம் போல உயர்ந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவு பெட்டகம். வழிநடத்த வேண்டிய நிலையில் அவர் இல்லை என பொன்னையன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- சி.வி.சண்முகம் கையில் இத்தனை எம்எல்ஏக்களா? அப்படினா இபிஎஸ் அவ்வளவுதானா.. பூதாகரமான பொன்னையன் ஆடியோ.!
மேலும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்ததாக ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டில் உண்மை இல்லை. 98 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை இருந்தால்தான் தொண்டர்களுக்கு உத்வேகம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமை கட்சிக்கு பலம். சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி தங்கமணி ஆகியோர் எனது நெருங்கிய நண்பர்கள் அவர்களை பற்றி நான் தவறாக பேசப் போவதில்லை. சசிகலாவையும் ஓபிஎஸ்யும் கட்சியில் இருந்து நீக்கினோமோ, அப்போதிலிருந்து கட்சியில் சாதி பாகுபாடு இல்லை.
சி.வி சண்முகம் மிகவும் திறமைசாலி அவர் திறமைக்கு கொடுத்த பரிசு மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி, எனக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை திறமைசாலி டெல்லியில் வழக்குகளை சந்திக்க கூடிய நபர் இளமை திறமையானவர் எதன் அடிப்படையில் தான் அவருக்கு வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி கீழே இருக்கும் எம்எல்ஏக்கள் சிவி சண்முகத்திற்கும் உட்பட்டு இருக்கிறார்கள் என பொன்னையன் கூறியுள்ளார்.