சி.வி.சண்முகம் கையில் இத்தனை எம்எல்ஏக்களா? அப்படினா இபிஎஸ் அவ்வளவுதானா.. பூதாகரமான பொன்னையன் ஆடியோ.!

Published : Jul 13, 2022, 08:39 AM ISTUpdated : Jul 13, 2022, 08:41 AM IST
சி.வி.சண்முகம் கையில் இத்தனை எம்எல்ஏக்களா? அப்படினா இபிஎஸ் அவ்வளவுதானா.. பூதாகரமான பொன்னையன் ஆடியோ.!

சுருக்கம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது பொன்னையன் எடப்பாடி பழனிசாமி அணியை டோட்டல் டெமெஜ் செய்யும் ஆடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது பொன்னையன் எடப்பாடி பழனிசாமி அணியை டோட்டல் டெமெஜ் செய்யும் ஆடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் செயலர் நாஞ்சில் கோலப்பனிடம் முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான பொன்னையன் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்,  கட்சி, ஒரு கோடீஸ்வரனிடம் இருந்து மற்றொரு கோடீஸ்வரன் கையில் செல்கிறது. முன்னாள் அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதாக திமுகவை திட்டுவதில்லை. 

இதையும் படிங்க;- ஆடியோ அரசியல்.. இபிஎஸ் ஆதரவு தலைவர்களை நாரடித்த பொன்னையன்.. பொன்னையனுக்கும் அன்வர் ராஜா கதியா.?

தொண்டர்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் உள்ளனர். தலைவர்கள் பணத்தின் பக்கம் உள்ளனர். அவரவர் பணத்தை பாதுகாப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு டெல்லியை பிடித்துக் கொண்டு ஆடுகின்றனர். தங்கமணி தன்னை பாதுகாக்க மு.க ஸ்டாலினிடம் ஓடுகிறார். அதேபோல் கே.பி முனுசாமி ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். கே.பி முனுசாமி துரைமுருகனை பிடித்து பெட்ரோல் பங்கினை வாங்கிவிட்டார். இதனால் மாதம் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

இதையும் படிங்க;- ராஜபக்சேக்கு வந்த நிலைமைதான் எடப்பாடியாருக்கும் வரும்.. டிடிவி.தினகரன் சரவெடி.!

எடப்பாடி முதுகிலேயே எம்.எல்.ஏக்கள் குத்துகின்றனர். அதனாலேயே எம்.எல்.ஏக்கள் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். சி.வி.சண்முகம் பகலிலேயே குடித்துக் கொண்டிருப்பார். சி.வி சண்முகம் கையில் சாதி அடிப்படையில் 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள 42 எம்.எல்.ஏக்களில் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பக்கம் உள்ளனர்.  கே.பி முனுசாமி ஒற்றைத்தலைமைக்கு வர முயற்சிக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி கொள்கையை விட்டுவிட்டு பதவிக்கு ஆசைப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக அண்ணாமலை செயல்படுவது போல் அதிமுக நிலை ஆகிவிட்டது. எம்.ஜி.ஆரின் ஆன்மாவும் ஜெயலலிதா ஆன்மாவும் தான் இனி அதிமுகவை காப்பாற்ற வேண்டும்  என பொன்னையன் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க;- அவங்க சைடுல இருந்து எந்த மனு வந்தாலும் நிராகரிங்க.. இபிஎஸ்க்கு விடாமல் குடைச்சல் கொடுக்கும் ஓபிஎஸ்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!